பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அறநூல் தந்த அறிவாளர்


மைத்துனனுக்குச் சிறந்த அறிவுரை கூறினாள். 'அரசே! உடன்பிறப்பு என்பது உயர்ந்த தோள்வலி அல்லவா! அதனை இழக்கத்துணிந்தீரே! இராமனும் பரதனும் போன்ற உடன்பிறப்பு அல்லவா உலகில் உயர்வைத் தரும்! கதிரவன் மைந்தனாகிய சுக்கிரீவனையும், இலங்கை வேந்தனாகிய விபீஷணனையும், பாண்டவரில் ஒருவனாகிய பார்த்தனையும் உடன்பிறப்புக்கு எடுத்துக்காட்டாக, எண்ணாதீர்!' என்று அன்புடன் எடுத்துரைத்தாள்.

'செஞ்சுடரோன் மைந்தனையும் தென்னிலங்கை வேந்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே-விஞ்சு[தனையும்
விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட
பரதனையும் ராமனையும் பார்.'

என்ற இனிய பாட்டைப் பாடினாள். அண்ணியாரின் அறிவுரைபைக் கேட்ட அதிவீரராமர் அகமகிழ்ந்தார்.

நறுந்தொகைச் சிலநூல்

இம்மன்னர், சிறுவர்க்கு அறிவுரை புகட்ட விரும்பினார். சின்னஞ் சிறிய தொடர்களால் உயர்ந்த உண்மைகளை விளக்கினார். அத்தகைய எண்பத்திரண்டு தொடர்களை உடைய சிறுநூலே 'நறுந்தொகை' என்னும் அறநூல். இந்நூல் 'வெற்றி வேற்கை' என்றும் கூறப்-