பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 70



17. நிறை வாழ்வு

1947 -ம் ஆண்டிலிருந்து ராஜா அண்ணாமலைச் செட்டியாரின் உடல் நலம் மெலிவுறத் துவங்கியது. எவ்வளவு மனவலிமையுடன் எதிர்த்து நின்ற போதிலும்; இறுதி நாட்கள் தன்னை நெருங்கி வருவதை அவர் உணர்ந்தார்.

தந்தையின் அருகில், மருத்துவர்கள் புடைசூழ சோகமே உருவாக முத்தையா செட்டியார் நின்று கொண்டிருந்தார்.

ராஜா அண்ணாமலைச் செட்டியார், முத்தையா செட்டியாரை அருகில் அழைத்தார்.

தன்னை செட்டி நாட்டிற்கு கொண்டு செல்லும்படி மெல்லக் கூறினார்.

உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தான் பிறந்த மண்ணை மிதித்த ராஜா அண்ணாமலைச் செட்டியார் புனித உணர்வு பெற்றது போல் உணர்ந்தார். சுற்றிலும் உறவினர்கள் சூழ்ந்திருக்க தன்னுடைய மகன், முத்தையா செட்டியாரின் கரங்களைப் பற்றியபடி தனது இல்லத்தை நினைவு கூர்ந்தார்.

மெல்ல மெல்ல அவர் நினைவு நழுவிக் கொண்டிருந்தது.

1948 ஜூன் 15 தேதி மாலைப் பொழுதில் அவரது ஆவி மெல்லப் பிரிந்தது.