பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61 அற்புத மனிதர்




14. அறுபது ஆண்டுகள்!

மனித வாழ்க்கையில் அறுபது ஆண்டுகள், என்பது ஓர் இனிய கனவாகும். வாழ்க்கையின் பலதரப்பட்ட அனுபவங்களை, தழும்பேற்றிக் கொண்ட ஒரு நீண்ட பயணத்தின் இளைப்பாறல்.

1941-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 திங்கள் ராஜா அவர்களின் மணிவிழா கொண்டாடப்பட்டது.

உலகமக்களிடத்தில் அவருக்கிருந்த தன்னிகற்ற சிறப்பின் வெளிப்பாடாக, அந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் அவர்கள் தமிழ் இசை இயக்கத்தைத் துவங்கியபோது பலர் வன்மையாக எதிர்த்தனர்.

தமிழில் கீர்த்தனைகளைப் பாடுவது ஒரு பாவச்செயல் போல் பிரசாரம் செய்தார்கள்.

அதுகாறும், யாருடைய அவதூறுக்கும், நிந்தனைக்கும் ஆளாகாது தூய தொண்டு வாழ்வு வாழ்ந்து வரும் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், தமிழை உயர்வு படுத்த எண்ணியதற்காக, பொருள் தெரிந்து இசை பாடத் தமிழ்தானே தகுதியானது என்று கூறிய காரணத்திற்காக வெகுண்டார்கள்.

ஆனால் அண்ணாமலைச் செட்டியார் அதற்காக யாரையும் நோகவுமில்லை; குறைபடுத்தவுமில்லை.