பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அண்ணுவின் அறிவு மொழிகள்


அடக்கு முறைகள் எல்லாம் விளையாட்டுக் கருவிகளே.

அழகு ஒர் ஆபத்தான ஆயுதம். அறிவிப்பு சாதனையல்ல. அன்பைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை. இது பாமரனின் காலம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! எதையும் தாங்கும் இதயம் வேண்டும். ஏமாற்றத்தின் விளைவே சினம். ஏழைகளுக்கு உதவுவது நாட்டுக்கு உதவுவது ஆகும். ஏழையின் சிரிப்பிலே இறைவன். ஒரு நாட்டின் உயிர் அதன் பண்பாட்டிலே. கட்டாயம் எப்பொழுதும் எதிர்ப்பைத் தோற்றுவிக்கும். கடமை கண்ணியங், கட்டுப்பாடு. கத்தியைத் தீட்டாதே;புத்தியைத் திட்டு, கதை என்பது கட்டுவதுதானே கருத்து சிந்தனையின் விளைவு கவிதையின் அடிப்படை உணர்வுப் பெருக்கு. காலம் என்னுஞ் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாகான். சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு