பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பூர்ணசந்திரோதயம்-2 ளாகவும் இருந்த அந்தப்பெண் அப் படிப்பட்ட அகால வேளையில் நிர்மானுஷ்யமான அந்தப் பாதையில் வீழ்ந்து கிடந்தது, என் மனசில் கட்டிலடங்கா ஆச்சரியத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கியது. யாராவது துன்மார்க்கர்கள் அவளை அவளுடைய வீட்டிலிருந்து பலாத்காரமாக எடுத்துவந்து அங்கே எவ்விடத்திலாயினும் விட்டிருப்பார் களோ என்றும் வேறு பலவாறாகவும் நான் எண்ணமிட்டு அவளண்டை நெருங்கி அவளை உற்றுப் பார்த்தேன். அவளது கால்களில் முழங்கால் வரையில் புழுதி படிந்திருந்த தாலும், அவளது முகம் முதலிய அங்கங்களெல்லாம் களைப் புற்று சோர்ந்து வாட்டமடைந்து இருந்ததாலும், அவள், வெகு தூரத்திலிருந்து பிரயாணம் செய்துவந்த வளாகத் தோன்றினாள். அவளது கண்கள் மூடப்பட்டிருந்தன. அவளது பரிதாபகரமான நிலைமையைக் காணவே என் மனம் பதறிக் கலங்கி அப்படியே உருகிப் போய் விட்டது. நான் உடனே அவளண்டை நெருங்கி நின்று, 'யாரம்மா படுத்திருக்கிறது? ஏனம்மா இப் படி நடுப் பாதையில் படுத்திருக்கிறாய்? உடம்பு என்ன செய்கிறது? கண்ணைத் திறந்து கொள்' என்று அன்பாகக் கேட்க, அந்தப் பெண் மெதுவாகக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள். பார்த்த உடனே அவள் நிரம்பவும் நாணமடைந்து சடக் கென்று எழுந்திருக்க முயன்றாள். ஆனால், அவளது உடம் பு கட்டிலடங்காமல் பூமியில் சாய்ந்தது. மயக்கமும் கிறுகிறுப்பும் கொண்டவளது தலைபோல, அவளது தலை கீழே சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்தது. அந்த நிலைமையில் அவள் மிருதுவான குரலில் பேசத்தொடங்கி, "ஐயா! பசியினாலும் தாகத்தினாலும் களைப்பாக இருக்கிறது. மயக்கத்தினால் கண் இருளுகிறது. நான் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. எனக்கு முதலில் கொஞ்சம் ஜலம் வேண்டும் என்றாள். அவள் முற்றிலும் பலஹீனமான குரலில் பேசினாள். ஆகையால், அவளது குரல் கிணற்றிற்குள்ளிருந்து பேசுகிறவளது குரல்போல உள்ளடங்கிப்