பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 43' மங்களிற் செய்த தவத்தின் பயனே?’-எனப் பாராட்டி மகிழ்ந்தவர். இப்பதிகத்தில் பரம மாயையின் நேர்மையை யுil |பந்தப் பெருமானது திருவிளையாடலையும் சொல்ல முடியாத அழகுடன் சொற்களை அமைத்துச் சுவாமிகள் பாடியுள்ளார். இது மனப்பாடஞ் செய்ய வேண்டிய ஒள் அருமைப் பாடலாகும். குடவாயினின்றும் நீங்கித் (A9) திரு. வாஞ்சியம் (816) வந்து அத்தலத்துப் பாடலில் வாழ்க்கை நி%யாமையை விளக்கி, வயலூரையும் போற்றி, திருவாஞ்சி யம் முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்று என்னும் அரிய விஷ யத்தையும் 'முத்தியருள்தரு திருவாஞ்சியம்’ என்ற தல்ை விளக்கினர். சுவாமிகள் காலத்தில் வட வேங்கடத்தில் திரு மால் கோயில் கொண்டிருந்தார் என்பது இப்பதிகத்தில் உல ன்ேற பச்சையுமை ய(ண்)ணன் வடவேங்கடத்தி லுறை பவன்' என வருவதால் தெரிகின்றது. திருவாஞ்சியத்தை விட்டபின் (50) திரியம்பக புரம் (829) என்னும் தலத்தைத் தரிசித்துப், பின்னர்க் (51) கூந்தலூரைச் (878) சேர்த்து தமது குற்றங்களை எடுத்துப் பலவாருகக் கூறி-அத்தகைய நான் பலமலர் கொண்டோ ஒரு மலர் கொண்டோ உனது தாளைத் தொழ அருள் புரிதி என வேண்டியும், அடியார் புகழை ஆய்தலின் பலனை எடுத்துக் கூறியும் பதிகம் பாடி னர். பின்பு அங்கிருந்து (52) திருவீழி மிழலைக்கு (851) வந்து, கணக்கிலாப் பிறப்பெடுக்கும் தொல்லையைக் கூறி, ஒரு முறை 'முருகா" என்ற போதிலும் உயர்கதி வரும் எனும் உண்மையை எளிய நடையில் அருமையாக விளக்கிப் பாடி ர்ை. இப்பாடல் மனப்பாடஞ் செய்து பாராயணஞ் செய்ய வேண்டிய பாடல்களுள் ஒன்ரும். இப்பாடலில் உள்ள 'ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா எனவோதருள் தாராய்” 'முருகா எனவோர் தரமோ தடியார் முடிமே லிணை தாள் அருள்வோனே’’ என்னும் அடிகள் ஜெபத்துக் குரியன.