பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி [தத்வோபதேசம்| 217 றுண்டு, பிடித்துக் கரையேறுவதற்கு ஒரு பற்றுமின்றி, சுழற் காற்று, சுரு:மீன் போன்ற காமமாதிய இடையூறுகளிற் பட்டுத் தியங்கி மயங்கிக் கிடக்கும் நாம் நன்னெறியைக் கண்டு பிறவித் துயரை ஒழிப்பதற்கு வேண்டிய பல அரிய உபதேச மொழிகளை நமது அருணகிரியார் எடுத்துப் போதித்துள்ளனர். 'கற்றபின் நிற்க அதற்குத் தக” எனப் பொய்யா மொழியார் கூறியவாறு, சுவாமிகளது உபதேச மொழிகளைக் கற்று அவ்வழியே நடந்து உய்தலே நமக்குக் கதி யாதலின் ஈண்டு அம்மொழிகளை ஒருவாறு திரட்டிக் காட்டுவாம். சுவாமிகளது உபதேச மொழிகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற் பொருளையும் நன்கு விளக்கு Ճ) I 5TT ս முதலாவது ;-அறம் : ஒளவைப் பிராட்டியார் ஒதிய வாறு : ஈதல் அறம் ' என்பதே அருணகிரியாருடைய முடிபு. ஈதலின் இன்றியமையாமையைத் தமது நூல்களிற் பல இடங்களிற் பசுமரத் தானிபோலப் பதிவுற விளக்கி யுள்ளார். தினையளவேனும் பங்கிட்டு உண்ணுங்கள், பசி யுற்றவருக்குப் பகிர்ந்து கொடுக்க இசையுங்கள், அவருக்கு ஒரு பிடி யன்னமேனும் படையுங்கள், இல்லை யென்று சொல்ல நாணங்கொள்ளுங்கள், உள்ளதை மருமல் எள்ளி னள வேனும் பகிர்ந்து கொடுங்கள், நொய்யிற் பிளவள வேனும், தவிடளவேனும் தானமிடுங்கள்-இதுவே வினை தொலையும் வழி-எனப் பலவாருக எடுத்தோதி உள்ளார். 'தினையளவு பங்கிட்டுண்கை' (திருப். 17) 'பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே' (249) 'இல்லையென நாணி உள்ளதின் மருமல் எள்ளி னள வேனும், பகிராரை (666) 'பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் படையாதே'(675) 'தவிடி ர்ைப்பத மெனினு மேற்பவர் தாழாதியேன் (1062) இரவோருக் கேது மித்தனை தானமிடாதவர் ஏழ்தர குழல்வாரே (1149) *தான மென்று மிடுங்கோள்,"