பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (குளுதிசயம்) 223 4. அன்ன நடையில்...கண்ணழிவு வைத்த புத்தி ஷண் முகம் நினைக்க வைத்த கன்மவசம் (திருப். 1189) -பக்கம் 14-அடிக் குறிப்பு 4-5 பார்க்க அவர் மெய்ம்மையே பேசும் பெருந்த்கையா ராதலின்அவர் தமது சுய சரித்திரத்தையே நாணுது கூறி இத்தகைய கீழோனுக்கும் மேலோனுகிய நீ அருள் புரிந்தனையே என முருகன் கருணையையே வியந்து பாராட்டித் தமது நன்றி யறிவைப் புலப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகத் தெரி கின்றது. இதல்ை அருணகிரியாரது பெருமை மேலெடுத் துக் காட்டுமே ஒழிய ஒரு சிறிதும் தாழ்வு படாது; ஏனெ னில் அவர் முன் செய்த தபோபலம் எத்துணைச் சிறப்புற் றிக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை போல விளங் குகின்றது. முருக வேளின் ஆட்கொள்ளுங் கருணைத் திற மும் மிகச் சிறப்பாகத் துலங்குகின்றது. வரகவி-மார்க்க சகாய தேவரும் திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில்"மாதரிரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி-எனக் கூறியுள் ளனரல்லவா? 2. ஆணவ மின்மை ; இவர் முருக வேளின் திரு அருட் ப்ரசாதத்தால் 'பதி கேள், அகம்’ எனும் மாயை ஒழிந்து, உண்மைப் பத்தி நிலையில் உயர்ந்த தானத்திலி ருந்த நிலைத்த புத்தியர் என்பதிலும் யான், எனது என் னும் ஆணவம் அற்ற மஹான் என்பதிலும் யாதோர் ஐயப் பாடும் இல்லை. இவர் தம்மை இழிவு படுத்தித் தம்மைத் தாமே வைது கொள்ளும் வைதற் சொற்களைக் காணவேண் டுமென்ருல் அவகுண விரகன என்னும் 611-ஆம் பாடல் ஒன்றே போதுமானது. தம்மை அலகின்மாறு (விளக்கு மாறு-துடைப்பக் கட்டை), ஏடெழுதா முழு ஏழை, ஒட் டாரப் பாவி, காமுகயுைறு ஜாதக மாபாதகன், காம க்ரோத துார்த்தன் எனப் பலவாறு இழித்துக் கூறுகின்ருர். 3. கருணை : சுவாமிகள் இயற்கையாகவே மிக்க கருணைக்குணம் வாய்ந்தவர் ஆதலால் "ஐயோ! உலகோர்