பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அநுபந்தம் 1 2. சிகரவரை விண்டு1விற் பதுங்க முளரிமலர் பங்க2முற் றலைந்து - செவி3குறைய மந்த ரத்தை யுந்து மதயானை திசைதொறு மடங்க வச்ர கும்ப முடைபட மதன் சிரத் தணிந்து திகழ் மகுட மங்கி யிற்பொரிந்து பொடியாக; மகர முகள் சிந்து மொக்கு ளந்த னுருவழிய வண்பனைக் குரும்பை வசியிலற அம்புவிக்கு ளொன்று மிணையாகா மறுவடிவு கொண்டிழைத்த தென்று கெருவித முடன்புடைத் தெழுந்து வளருபய கொங்கையர்க்குள் நைந்து மெலிவேனே: பகரமரர் குஞ்சரிக்கு மஞ்சு பருகு குற மஞ்சரிக்கு மொன்று படும் விரக சம்ப்ர மத்தினின்ப மறவாதே படரொளி விரிந்த சப்ர மஞ்ச மலரணையி லன்பு றக்கலந்து பரிவு பெறு சுந்த ரப்ர சண்ட மயிலோனே

  • அகர வுயி ருந்தனித் திருந்த

ககரவுட லுந்தமிற்பு ணர்ந்து ளமையவிடை நின்ற அக் கரங்கள் முறையாக அதனைமரு வும்படிக் கிசைந்த விதிமுழுவதும் பகுத் துணர்ந்த அருணகிரி செந்த மிழ்க்கு வந்த பெருமாளே. 1. விண்டு-மேகம், ஆகாயும், 2. பங்கம்-சேறு 3.செவிசெவ்வி. முதல் நாலடி 882, 126 எண்ணுள்ள திருப் புகழ்க் கருத்தைப் பின்பற்றுவன.

  • . அகரமுமாகி (433), அகர முதல் (1127). என்னும் திருப்புகழ்களைக் குறிக்குமோ வேறு குறிக்குமோ ஆராய வேண்டும்.