பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் சினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித் தோட்கை துடுப் பாக-(மதுரைக் காஞ்சி. 29-34) (ii) முடித்தலை அடுப் பாகப் புனற் குருதி யுலைக் கொளிஇத் தொடித் தோள் துடுப்பிற் று.ழந்த வல்சி (புறநானூறு 26). (iii) முடித்தலை யடுப்பில் தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26242). (iv) அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து-போர்க் களத் தலகை வகுப்பு-அடி 24. அடி 10. அவித்து நுகர்வன. அவித்து = வேக வைத்து. அடி 17. துதிக்கை மலை=யானை. அடி 20. துவக்கி-சிக்கி, மாட்டிக் கொண்டு. அவச மொடு + விக்கி (விக்க லெடுத்து) : அடி_21 துருத்தி-ஊது வாத்தியம்: நாடக அரங்கு எனவும் கொள்ளலாம். - 22. கழி நெடில்-ஐந்து சீர் அளவைக்க மே ஸ் பட்ட பாடல்கள். அடி 29, (i) இதத்த கயிசிகம் இனித்த பயிரவி - பக்கம் 187-ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க. (ii) எழுவகை நிருத்தம் - எழுவகைக் கூத்து - குரவை, கலி நடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற் பாவை, விதுாடக் கூத்து (வசைக் கூத்து) ; வெறியாட்டு முதலாகிய கூத்துக்களும் கூட்டி ஏழென்பதுண்டு. "எழுவகைக் கூத்தும் இழிகுலத் தோரை யாட வகுத்தனன் அகத்தியன் தானே (சிலப்பதிகாரம் -அரங்கேற்று காதை-பக்கம் 80-81 உரை) 8 செருக்களத் தலகை வகுப்பு : அடி 7-10. யானைத் தலை முத்தைச் சமையல் செய் வது; பனைக்கை மதமலை-தலை-உக்குள-தரளத்திரளை-அடி யென்-உரலிட்டு-மருப்புலக்கை குத்தி-உலை வைத்து உண வைச் சமைக்கும். யானை மத்தகத்தினின்று உதிர்ந்த முத் துக்களை-யானையின் அடியாகிய உரலிலிட்டு-கங்கம்