பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 அருணகிரிநாதர் தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றி.டினே.” (கந். அலங். 38) (10) கலியாணம் நிறைவேற ; நீலங்கொள் மேகத்தின் மயில்மீதேநீவந்த வாழ்வைக்கண் டதேைலமால்கொண்ட பேதைக்குன் மணநாறும்மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே! வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே! வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா! நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே (திருப்.1295) (11) கருப்பம் நலனுற* மதியால்வித் தகனுகி-மனதாலுத் தமனுகிப் பதிவாகிச் சிவஞான-பரயோகத் தருள்வாயே. நிதியே! நித் தியமே! என்-நினைவே! நற்பொரு ளாயோய்! கதியே சொற் பரவேளே!-கருவூரிற் பெருமாளே -(திருப். 927) (12) புகழ் பெற, பகையற: 'திருத்தணி யிருக்கும் பெருமாளே ! நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்.” (திருப்.263) (குறிப்பு:-இப்பாடல் முழுமையுங் கூறுதல் நலம்). (13) இம்மை, மறுமை இரண்டினும் சுகம் பெற* அமரர் சிறைமீட்ட பெருமாளே இகபர செளபாக்யம் அருள்வாயே (திருப்.191) (குறிப்பு:-பாடல் முழுமையுங் கூறுதல் நன்று). *10, 11, 13 இம்மூன்றும் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் அருளிய உபதேசங்கள். (14) காலையும் மாலையும் ஒலயுந் தூதருங் கண்டு.திண் டாடல் ஒழித்தெனக்குக் காலையு மாலையும் முன்நிற் குமே கந்தவேள் மருங்கிற்