பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f36 அருணகிரிநாதர் தத் தலத்தையும் குறிக்காது எந்தத் தலத்துக் கோயிலிலும் உள்ள முருக மூர்த்தியைப் போற்றிப் பணிய உதவும் பொதுத் திருப்புகழ்ப் பாடல்கள் பல பாடினர். இப்பொ ழுது கிடைத்து எங்கள் பதிப்பில் வெளிவந்துள்ள் 1307 பாடல்களில் தலப்பாடல்கள் ஆறு திருப்பதிகளுக்கு உரியன் 451 பிற தலங்களுக்கு உரியன ... 545 கூேடித்திரக் கோவை H = H 1 பொதுப் பாடல்கள் : ... 310 ஆக. 1307 இப் பொதுப் பாடல்களில் உள்ள முக்கிய விஷயங்கள் பின் வருவனவாம் : 1. முருகரும் வள்ளியம்மையும் 1. வள்ளியம்மை தவிர வேறு தஞ்சம் தமக்கு இல்லை என்று முருகவேள் தமது வேளையைப் (பொழுதை) அம்மை யாருக் கென்றே போக்கினர் என்பது. (திருப். 1000) 2. உன் குழை ஒலையைத் தா. அந்த ஒலையில்-உன் கண்கள், தனங்கள் முதலியவற்ருல் நான் மனந் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்று சாசனம் (பத்திரம்) எழுதித் தருகின்றேன் என்று வள்ளிப் பிராட்டியிடம் முருக வேள் கூறினது : (1002) o 3. வள்ளியம்மையின் உறைவிடமாம் காட்டுக்கும் ஒர் அடிமைக் கும்பிடு போடும்படி வள்ளிபாற் காதல் மயக்கம் கொண்டார் முருகவேள் என்பது. (1151) 4. வள்ளியம்மைக்கு வழியடிமை யான் என்று முருக விரான் மேருமலையிற் சாசனம் (பத்திரம்) எழுதிவைத்தனர் என்பது. (1199) 3. தினைப் புனத்தில் இசைபாடி வள்ளியை வசியப் படுத்தியது. (1024)