பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அருணகிரிநாதர் என்றும் பாடி மகிழ்ந்தார். இனித் திருச் செங்கோட்டுப் பதிகங்களில் உள்ள முக்கியமான விஷயங்களில் சில இங்கு எடுத்துக் கூறுவாம். (i) நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன் |திருமந்திரம் 2968) எனத்திருமூலர் கூறிய வண்ணம், அருணகிரியாரும் 'நாககிரிப் பெருமாளே! யமன் என்னி டம் வரின் உனதருளே படையாக அவன் மடிந்து வீழ அவைேடு நான் அமர் செய்வேன். அப்பொழுது நீ முன் அருணையில் ஒரு முறை மகா சபையிற் வந்தது போல மயில் மீதேறிப் பழைய அடியார் கூட்டத்துடன் தமிழ் முழங்க மறை முழங்க வரவேணும் 'கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒருதின்ம் இருபதம் வழிபடு குதலை யடியவன் நினதருள்_கொடு பொரும் அமர்கான ...மரகத துரகத மிசையேறிப் பழைய அடியவ ருடன் இமை யவர்கணம் இருபுடையும் கு தமிழ் கொடு மறை கொடு 'பரவ வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணும்'387 எனப் பிரார்த்தித்தனர். (ii) 368-ஆம் பதிகத்தில் விலங்கல் ஒன்ருறு கண்ட கண்டா என்பதற்கு-மலை ஏழு (1+6) துண்டாக ஆக்கிய வீரனே' என்றும் பொருள் கொள்ளலாம். 374ஆம் பதிகத்தில் மலையேழு துண்டாய் எழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந்தே நடனமுங் கொள் வேலா-' என வருதல் காண்க. (மலை ஏழு-ஏழு துண்டாய்; ஏழு-இடை நிலைத் தீபம்.) - (iii) முருகா வேசையர் பார்வையில் அழியாமல் அம்மயக்கை அழிக்க வல்ல ஞானத்தை எனக்கென்றே பெறுமாறு (ஒப்பிலா வகையில் நான் பெற) அதிக விருப் புடையேன். நீதான் துணை செய்ய வேண்டும். 'பாவிகள் கடைக்கண் பார்வையி லழியாதே விலக்கும் போதகம் எனக்கென்றே பெற விருப்பஞ் சாலவும் உடையேன் நான்...அருள்வாயே'372