பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அருணகிரிநாதர் உலகோர்க்கு உணர்த்தினர். இத்தலத்தில் முருத பிரான் திருக்குரா மர நீழலில் அமர்ந்துள்ள திருக்கோலத்தை அட் படியே தமது உள்ளக் கிழியில் உருவெழுதிப் பின்னர்த் திருத்தணிகை முருகனை தரிசித்த காலையில் கொந்துவார் குரவடியினும் (289)...மருவிய தணிகையில் இணையிலி' எனவும் சுவாமி மலையைத் தரிசித்த போதும் 'குராவின் நிழல் மேவுங் குமாரனென1 நாளும் குலாவி யினிதோது அன்பினர் வாழ்வே' (201) எனவும் போற்றினர். திரு விடைக்கழி ஆண்டவர் திருத்தணிகை யாண்டவர் போலவே தொடையின் மிசை இடது திருக் கையை வைத்துள்ளார்; ஆதலால் தணிகைப் பிரான நினைக்கும் பொழுதெல்லாம் இடைக் கழி எந்தையின் ஞாபகமும் இடைக்கழியை நினைக் கத் தணிகை ஞாபகமும் அருணகிரியார்க்ரு அவசியம் வரும். உதாரணமாக 2னயிலி' -திருப்,289 'இடைக் கழியில்...அழகிய செருத்தணியில்’ -வேடிச்சி காவலன் வகுப்பு 'இடைக்கழியில் ஒரு செருத் தணியில் இனிதிருக்கும் அறுமுகன்’ -பொருளகத் தல்கை வகுப்பு 'ஏரகம் இடைக்கழி...ஏரணி ១o -வேளைக்காரன் வகுப்பு 'கொந்துவார் குரவடியினும்...மருவிய...தணிகையில் இ o 'இடைக்கழியும்...செருத்தணியென் வெற்பும்' -பூத வேதாள வகுப்பு 'திருத்தணி...கோடை அதிப இடைக்கழிமேவு பெரு மாளே” நிஞ்0ே0 அருணகிரியார்க்கு விசேட வித்தைகளை முருகவேள் அதுகிரகித்த தலங்களுள் திருவிடைக் கழியும்;ஒன்றென்பது 'அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் 1. பழநிமலையிலும் குராவடிக் குமரர் சந்நிதி ஒன்றுளது.