பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அருணகிரிநாதர் (1) (பார்ப்பதி மைந்தன், கமலாலயன் (தாமரையில் இடங்கொண்டு தோன்றியவன்), படையினன், சேவகன், வரபதி, சுரபதி, கந்தன், கார்த்திகேயன், குருபரன், கதம் பன், கருணுகரன், மால் திருமருகன்-ஆகிய முருகவேளின் திருவடிச் சூட்டு: (2) திகூைடி என்னும் குண்டலம்; (3) அணிமயச் சிவிகை, (4) அரியாசனம்: (5) பொன்னடை, (6) சயசாரம், (7) அத்துவித நிலை; (8) பிணியின்மை; (9) ஆக்கம்: (10) இன்பம்; பின்னும் (11) இரப்போர்க்கு ஈகை என்னும் எக்காளம்; (12) துறவு நிலையினுங் கொடை என் அனும் சங்கு: (13) பொறை என்னும் முரசு: (14) தேவரும் முநிவரும் உலகோரும் இறைஞ்சும் படியான கீர்த்திக் குதிரை: (15) வெற்றி வாரணம் (யானை); (16) வினை யொழிய வல்ல சுத்த பரம மவுனம். வகுப்புக்களின் ஆற்றல் மேற் சொல்லப்பட்ட திருவகுப்புக்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுவாம். (1) சீர்பாத வகுப்பு: ஞா ன த் தை அளித்து யம. பயத்தை நீக்கி, அருள் நெறியிற் சேர்த்து வினைப்பகை ஆதிய எவ்வகைப் பகையையும் அழித் தொழிக்க வல்ல மணி வகுப்பு இது. (21 தேவேந்த்ர சங்க வகுப்பு : பூதம், பிசாசு, கடிய வினை ஆதிய துஷ்டப் பகைகளையும் யமனையும் வெருட்டு தற்கு வல்ல மந்திர வகுப்பு இது. (3) வேல் வகுப்பு : எவ்வித ஆபத்தையும் விலக்கி உயிர்த் துணையாய் நிற்கும் ஒளவுத வகுப்பு (மருந்து வகுப்பு) இது; ஆகவே, முதல் மூன்று வகுப்புக்களும் மணி மந்திர ஒளவுத வகுப்புக்களாம் என்க. 14:1-16) 4-ஆம் வகுப்பு-திருவேளைக்காரன் வகுப்பு 12-ஆம் வகுப்பு-வேடிச்சி காவலன் வகுப்பு. 15-ஆம் வகுப்பு-புய வகுப்பு-இம்மூன்றும் தோத்திரத்துக்கு உரி யனவாய்ப் பத்தித்துறை யிழிந்து ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புக்களாம் என்க.