பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

胥72 அருணகிரிநாதர் (பக்கம் 109) அநுபூதிப் பாடல்கள் சில பாடப் பட்டிருக்க லாம். எப்படியுங் கந்தரலங்காரத்துக்கு முன் அநுபூதிச் செய்யுள்கள் பல பாடப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கந்த ரலங்காரச் செய்யுள்கள் பக்தி பெரிதும் ஊ முருகன் திருவருள் பெரிதும் நிரம்பித் ததும்பி வழியும் காலத்திற் பாடப் பட்டனவாய்த் தெரிகின்றன. பின்னும், உலகுக்கு உ ப ேத ச வ கை யி ற் கந்த ரலங்காரத்தில் 19 பாடல்கள் உள்ளன : ஆல்ை கந்த ரநுபூதியில் உலகுக்கு உபதேசப் பாடல் ஒன்றே- 17 - உளதென்ன லாம். மேலும், அநுபூதி 51 பாடல்களில் சாந்தி பெருது கலக்க முறு நிலையிற் பாடப்பட்டவை 22 பாடல்கள். அலங்காரத்திலோ தன் குறை கூறல், நெஞ்சொடு கிளத் தல், பிரார்த்தனை என்னுந் தலைப்புக்களில் (நூற்றில்) 37 பாடல்கள் தாம் உள ; ஏனையவை யமனை வெருட்டல், பிர மனை வெருட்டல், அற்புத மாலை, ஆனந்த மாலை, கோளறு பதிகம், கவசப் பதிகம் என்னும் பல வகைய உயர்நிலைப் பாடல்களாயுள்ளன. கந்த ரநுபூதியிற் பல பாடல்கள் தம் குறை கூறுவனவும், தாம் பெற்ற பேற்றை நினைந்து மகிழ் வனவுமாய் எல்லாம் தன்மை இடத்தனவாய் உள்ளன. ஆகவே, பல குறைகளுக்கும் ஆளாய் உள்ள நம் போலியர் முருகனைப் போற்றி உய்வதற்கு-நித்திய பாராயண நூலா கக் கொள்வதற்கு - மிகப் பொருத்தமான நூலாகக் கந்த ரநுபூதி திகழ்கின்றது. பார்ப்பதற்கு எளிதாய்த் தோன்றி னும் இவ்வநுபூதி நூலின் பொருட் சிறப்பு மிக மிகப் பெரிய தாம். அச் சிறப்பை உணர்ந்தே தாயுமான சுவாமிகள். 'கந்தரது பூதிபெற்றுக் கந்தரது பூதி சொன்ன எந்தையருள் நாடி யிருக்கு நாள் எந்நாளோ 1 என வியந்து போற்றினர். அநுபூதியின் தண்ணிய நடையையும் செவ்விய பொருளையுங் கண்டே பல்லாண்டு களாகப் பெரியோர் இந்நூலைப் பாராயண நூலாகக் கொண்டு பலனடைந்து வருகின்றனர். இதை நித்ய பாராயணஞ் செய்ய இயலாதவர் என் தந்தையார் செய்து வந்தது போல ஞாயிறு 12, திங்கள் (மகல் வியாமன்