பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哥78 அருணகிரிநாதர் (i) திருப்புகழ் ஒன்றில் தவிர-திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி என்னும் நூல் களில் வயலூர் சொல்லப்பட இல்லை. இதன் காரணம் நன்கு புலப்பட வில்லை. செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் செப்பு -(திருப். காப்பு-3) எனத் திருப்புகழ் ஒன்றையே இறைவன் குறித்தது பற்றியோ ? (iv) திருஞான சம்பந்தர் முருகரே என்னும் கொள்கை திருப்புகழிலும், கந்தரந்தாதியிலும் தான் சிறப் பிக்கப்பட்டது. கந்தரநுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு என்னும் நூல்களிற் சம்பந்தரைப்பற்றி யாதுஞ் சொல்லப்பட் வில்லை. ஆகவே, கந்தரலங்காரம் பாடும்பொழுது இருந்த நிலை யிலும் மேம்பட்ட சிவஞான நிலையில் இருந்து பாடினது திருவகுப்பு என்பது விளங்குகின்றது. இத் திருவகுப்பின் பெருமையை 'நூலறி புலவ'னும் திருமுருகன் ஒருவனே அறிவன். நூலின் உயர் பொருளாலும் திரு வேளைக்காரன் வகுப்பில் 'எழையின் இரட்டைவினை யாயதொ ருடற்சிறை யிராமல் விடுவித்தருள் நியாயக் காரனும் ” என வருவதாலும், வேடிச்சி காவலன் வகுப்பில் அருணை நகரி:ைெரு பக்தனிடு...திருப்புகழ் மதாணி க்ருபாகரனும் ” எனத் தம்மைப் படர்க்கை இடத்தே வைத்துக் கூறினதாலும், அநுக்கிரக விசேடமும் அநுபூதிச் செல்வமும் முற்றின நிலை யில், சித்திகள் யாவுங் கைகூடின பிறகு, கிளியான பின்பு, பாடப்பட்ட நூல் திருவகுப்பு எனத் தோன்றுகின்றது. திருத்தணிகையைப் பற்றிப் பல வகுப்புக்களிலும் கூறியுள்ள காரணத்தால் 'உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்...திருத் தணி யிருக்கும் பெருமாளே-என முன் வேண்டியவாறே # 132) கிளியானபின் அருணகிரியார் திருத்தணி கைக்கு வந்து திருத்தணிகேசன் திருக்கரத்தே தங்கித் திரு