பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அருணகிரிநாதர் 3. வேல் வகுப்பு "பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்தநகை கருத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்...வேல்.’ வள்ளிப் பிராட்டி இச்சா சத்தியாதலின் மறச்சிறுமி விழிக்கு வேல் நிகராகும் என்ருர். வேலுக்கும் மறச்சிறுமி விழிக்கும் உருவ உவமை, பண்பு உவமை முதலிய பொருந்: தும். வள்ளிப் பிராட்டியின் கண்போல நீண்டு ஒளிரும் வேல். வள்ளிப் பிராட்டியின் கண்ணுேக்கால் வரும் பயன் யாவும் வேல் தரும்-என்க. பருத்த முலை முதலிய அடை மொழிகளையும் ஒருவாறு விளக்குவாம். பருத்தமுலை-பக்குவ நிலைத் தோற்றமாதலின் அது (1) தோற்றத்தையும்; சிறுத்த இடை-முலைப் பாரத்தைத் தாங்குதலால் அது (2) திதியை யையும்; வெளுத்தநகை - சிரித்தெரி கொளுத்துமாதலின் அது (3) சங்காரத்தையும்; கறுத்தகுழல்-இருளும் மறைப் புங் கொண்டதாதலின் அது (4) திரோபவத்தையும்; சிவத்த இதழ்-செம்மை வாய்ந்த வாய் உபதேசஞ் செய்யுமாதலின் அது (5) அதுக்கிரகத்தையும் குறிக்கும்: ஆக, வள்ளிப் பிராட்டிக்குக் கொடுத்த அடைமொழிகளால் மறச்சிறுமியிடம் பஞ்ச கிருத்திய சக்தியைக் காட்டினர். அங்ங்னமே, வேலி டத்தும் பஞ்சகிருத்திய சக்தி உண்டு. கண்ணுடியிற் தடம் கண்ட வேல் (திருப். 908) ஆதலின்-தோற்றமும், விரவாகு தேவரையும் நக்கீரரையும் காத்து அளித்த காரணத்தால்திதியும், சூரசங்காரம் செய்ததால் சங்காரமும், அடியாரி டத்து வெம்மையை மறைத்துத் தண்ணருள் காட்டியும், பகைவரிடத்துத் தண்மையை மறைத்து வெம்மையைக் காட் யும் ஒழுகுதலால் திரோபவமும், குமரகுருபரர் நாவிலும் அருணகிரியார் நாவிலும் பொறித்து நலந்தந்த காரணத் தால் அதுக்கிரகமும்-ஆகப் பஞ்சகிருத்திய சக்தி வேலி டத்து உண்டு என்பது விளக்கமாகின்றது. பின்னும், ஒரு விசேடம் இவ் வகுப்புக்கு உளது. இவ்வகுப்பு (தேவியினது) ப ரு த் த மு லை எனத் தொடங்குகின்