பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421


'புலிக்கேழ் (நிறம்) வேங்கைப் பூஞ்சினை -என்றும், உவமை காட்டப்பட்டன. வேங்கை பூத்ததை, 'வேங்கை அம் புலி ஈன்றன'2 -என்று செங்கண்ணனார் புலியை பெற்றெடுத்ததாகவே பாடினார். இவையெல்லாம் மரக் கிளைகள் புலிகளாகத் தோற்றமளித்தவை. வேங்கைப் பூ கொத்தாகவும் தனிப் பூவாகவும் உதிரும். அவ்வுதிரல் படிந்து கிடக்கும் இடங்களால் தோன்றும் காட்சிகள் புலிக்காட்சியாயின. வேங்கை மரத்தடியில் குன்றத்துக் குறவர் சிறு சிறு குடிசை கட்டியிருப்பர். அது குரம்பை எனப்படும், அதன்மேல் வேங்கைப் பூங்கொத்துகள் வரிவரியாக உதிர்ந்து படிந்திருக்கும். கருமை யான குரம்பைக் கூரையும் அதன்மேல் செம்மையான பூங்கொத்தும் சேர்ந்த அமைப்பு புவி நிற்பது போன்றிருந்ததாம். அதனைப் பார்த்த யானை ஒன்று புலி என்று அஞ்சியது. இவ்வாறு குரம்பை, புலி ஆயிற்று. வேங்கை மரத்தடியில் கரும்பாறைகள் சற்று நீட்சியாக அதிக உயரமின்றிக் கிடக்கும். அவற்றின் மேல் வேங்கையின் விரிந்த பூங்கொத்து விழுந்து கிடக்கும். இக்காட்சி, "இரும்புலி வரிப்புறங் கடுக்கும்'4 - -இது கரும்பாறை கரும்புலி ஆண்காட்சி. வேங்கை மரத்தடியில் மட்டமான தரைமேல் வேங்கை மலர் கள் வீழ்ந்து சிதறிக் கிடக்கும். இக்காட்சி புலித்தோலை விரித்துப் போட்டது போன்றிருந்தது. இது, தரையே புலித்தோலான காட்சி. . புலியைப் பெற்ற வேங்கை புலிக்குட்டியையும் பெற்றது மிகச் சிறிய கரும்பாறைக் கற்கள் முட்டிக் கொண்டு கிடக்கும் இதனைத் துறுகல்’ என்பர். 1 அகம் : 228 : 8 4. புறம் : 202 : 20 2. நற் : 889 : 1. 5 அகம் : 205 : 19, 20, 8 அகம் : 1.2 : 9-11 .