பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712


என்வே, கோளி என்னும் பெயரே அவற்றிற்குப் பூக்கள் உண்டு என்று சொல்கின்றது. இவ்வகை மலர்களாக அத்தியும் ஆலமும் கொழிஞ்சியும் கூறப்படும். அத்தி பூப்பது பற்றி முன்னே (இந்நூற்பக்கம் 117 - 119) காட்டப்பட்டது. "அத்திப் பூவையும் ஆந்தைக் குஞ்சை யும் கண்டவர் யார்?" என்றொரு பழமொழி உண்டு. எவ்வாறு ஆந்தைக் குஞ்சு இருப்பது உண்மையோ அவ்வாறே அத்தி பூப்பதும் உண்மையாகும். அதவு என்பதே இதன் மூலப்பெயர்; சங்க காலப்பெயர். அம் விகுதி பெற்று அதவம் ஆயிற்று. அதவமே பிற்காலத்தில் "அத்தி ஆயிற்று. இதன் கனி "அதவத் திங்கனி" எனப்பட்டது. இக்கனி செம்மை நிறத்தது. இதன் செம்மை நிறம் செம்மந்தியின் முகச் செம்மைக்கு உவமை கூறப்பட்டது. “ஆற்றயல் எழுந்த வெண் கோட் டதவத்து' என நண்டுகள் உள்ள ஆற்றங்கரையில் இம்மரம் உள்ளதாகப் பாடப்பட்டமை யால் இது மருத நிலத்ததாகும். இதன் இலைக் கட்கத்தில் பூ தோன்றும். நாம் கானும் பிஞ்சாகிய கோளவடிவமே பூங்கொத்து. கோளவடிவில் உருண்டை யாகவும், சில வால்பேரி வடிவிலும் அமையும். மேலே மூடியிருக்கும் தோல் போன்றது. இதன் மஞ்சரித் தண்டாகும். இதன் மேல்மட்ட மையத்தில் சிறு துளை ஒன்று உண்டு. இதனைக் கண்’ என்பர் இக்கண்ணோடு பூங்கொத்து உள்ளே நீண்டிருக்கும். புறமஞ்சரித் தண்டின் உட்புறச்சுவரில் ஒட்டிய நிலையில் பூக்கள் தோன்றும். இவை நுண்ணிய அளவில் எண்ணற்றவையாகப் பூக்கும். ஒவ்வொரு நுண்ணிய பூவிலும் அகவிதழ், சூலகம், காரகம் முதலிய உறுப்புகள் உண்டு. இவ்விதழ்கள் நீல நிறத்தவை, மஞ்சள் நிறத் திலும் அமையும். இவ்வொரு கொத்திலேயே ஆண் பூ, பெண் பூ, அலிப்பூ, மலட்டுப் பூ எனும் நான்கும், சிலவற்றில் ஒன்றிரண்டு குறைந்தும் அமைவது இதற்கொரு தனிப்பண்பு என்பர். இதனால் சிலவகை அத்திப் பூக்கள் தம் கொத்துக்குள்ளேயே தாதுத் துளைக் கலப்பித்துச் சூல்கொள்ளும். . - மேல் மட்டத்தில் 'கண்’ என அமைந்த துளையின் வழியே ஒருவகைக் குளவிப் பூச்சி புகுந்து பூவின் சூலறை யில் முட்டை 1 தற் : 95 8 2 ඵ්ණ් 2.