பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329


"அரவும் அரசும் ஆரும் ஆத்தியும்' -என ஆர் வேறு, ஆத்தி வேறு எனத் தனித்தனியே காட்டியுள்ளார். எது கருதி வெவ்வேறாகக் கொண்டாரோ? சங்க இலக்கியங்கள் சோழர் குடிப் பூவை 'ஆர்' என்னும் சொல்லாலேயே குறிக்கின்றன. கபிலர் ஆத்தி என்று பொதுவில் குறித்துள்ளார். இவை கருதி இரண்டையும் வெவ்வேறாகக் கொண்டிருக்கலாம். இரண்டும் ஒன்று என்பது முன்னரே காட்டப்பட்டது. . ஆத்தி நார் சோழர் குடிப் பூவாக அமைந்த ஆர் ஆத்தியை இன்றும் அடையாளம் காணச் சங்க இலக்கியங்களே துணை செய்கின்றன குடிப் பூவாகிய ஆர்-ஆத்தி கண்ணியாகவும் சூடப்படும் மாலையாக்கப்பட்டும் அணியப்படும். கண்ணியாக்கப்படுதல், 'தின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்று"2 -என மிடைத லாகக் குறிக்கப்பட்டது. மாலையாக்கப்படுதல், ஆர் புனை தெரியல்' எனப் புனைதலாகக் குறிக்கப் பட்டது. மிடைவதற்கும் புனைவதற்கும் எது கருவியாயிற்று? இதனை, - - 'ஆர் நார் செறியத் தொடுத்த கண்ணி' யைப் போர் வைக்கோ பெருநற்கிள்ளி என்னும் சோழர் குலத்தவன் சூடியிருந்த தாகக் கூறும் சாத்தந்தையார் பாடல் கொண்டு அறியலாம். ஆத்தி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட நாரால்கட்டப்பட்டகண்ணி என்று காட்டியுள்ளார். இது கொண்டு ஆத்தி மரத்தில் நார் உரிக்கலாம் என்று தெரிகின்றது. எப்படி உரிப்பது விளக்கந் தருகின்றார், மதுரை மருதன் இளநாகனார்: 1 பெருங் : உஞ்சைக் காண்டம் : 52 : 89 2. புறம் : 45 : 8 - 8 புறம் : 48 : 18 4. புறம் 81 : 3, 4