பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 தனது நன்றியறிதலையும் மனமார்ந்த வந்தனத்தையும் தெரிவித்து அவரை உபசரித்து அனுப்ப வேண்டும் என்றும் நினைத்தவளாய், அந்தப் பேதை மடவன்னம் கட்டிடத்தை நோக்கி நடக்கப் போனாள். இரும்புக் கதவண்டை நின்று கொண்டிருந்த முத்தம்மாள் அந்த உபகாரியை நோக்கி, 'ஐயா! இரண்டு கதவுகளையும் நன்றாகத் திறந்து வைக்கிறேன். வண்டியை உள்ளே ஒட்டிக்கொண்டு வாருங்கள். உங்களைப் பார்த்தால் நிரம்பவும் களைத்துப் போயிருப்பதாகத் தெரிகிறது. ஏதாவது தாகத்துக்குச் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரமிருந்து களைப்பாறி விட்டுப் போகலாம்' என்று மிகவும் பணிவாகவும் அன்பாகவும் உருக்கமாகவும் கூறி வருந்தி அழைக்க, அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த உபகாரி, அவளை நோக்கி மிகவும் அன்பான குரலில் பேசத் தொடங்கி, "நான் இப்போது உள்ளே வந்திருந்து ஒரு நிமிஷ நேரம் கூடக் காலஹரணம் செய்ய எனக்கு அவகாசமில்லை. நான் ஒர் அவசர காரியமாகப் பொன்னிரை என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன். கொஞ்ச துரத்தில் ஒரு மடமும் தாமரைக்குளமும் இருக்கின்றன. அந்த இடத்தில் நான் வண்டியை நிறுத்தி காளைகளுக்குத் தண்ணிர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில், பக்கத்தில் இருந்த காட்டுக்குள் யாரோ சில முரடர்கள் இந்தப் பெண்ணைக் கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போக முயல, அப்போது இந்தப் பெண் கூச்சலிட்டதைக்கேட்டு நான் போப், அந்த முரடர்களை எல்லாம் அடித்துப் போட்டுவிட்டு இந்தப் பெண்ணை வண்டியில் வைத்து இங்கே கொண்டு வந்தேன். இந்தப் பெண் நிரம் பவும் களைத்துப் போயிருப்பதோடு, பிரமாதமாகப் பயந்தும் இருக்கும். ஆகையால், நீ உடனே போய் அதன் களைப் பையும் பயத்தையும் தெளிவித்து ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். அவகாசப்பட்டால், நான் மறுபடியும் வந்து அந்தப் பெண் அந்த முரடர்களுடைய வசத்தில் அகப்பட்டுக் கொண்ட வரலாறுகளைக் கேட்டறிந்து கொள்ளுகிறேன். எனக்கு நிற்க