பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

715


காய்ப்பதையும், பூத்துக் காயாததையும் குறிக்கக் "பலாமாவைப் பாதிரியைப் பார்' என்றதையும் இக்கருத்தில் கூறப்பட்டதாகவே கொள்ளவேண்டும். அத்தி,ஆல் இரண்டின்பூக்களுக்கும் பலாப்பூவிற்கும் வேறு பாடு உண்டு. இரண்டும் காட்சிக்கு அரியன என்னும் நிலை யில் ஒன்றாயினும், இ க் காட் சிப் பட ைம இருவகைப்படும். முன்னவை குடத்து மலர்களாக உள்ளே பொதிந்து மறைந்திருப் பவை. பலா புறத்தே காட்சிப்பட்டுப் பூப்பது. ஆயினும், ஒவ்வொரு தனித் தனிப் பூவின் நுண்மை அவை கூடிய செறிவு” அவை மொய்த்துள்ளமை முதலிய கரணியங்களால் கண்ணால் காண்பதற்கு எளிதானதன்று. எனவே இவ்வகையில் அரிய Ls)&t) [f. பலாவிற்குப் பூ உண்டு என்பதைத் தொல்காப்பிய உரை களால் அறியலாம். ஆகார ஈற்றுப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு காட்டும் உரையாசிரியர்கள் பலரும் பலாப் பூ' எனக் காட்டி யுள்ளனர். - பலாப் பூவின் தொகுப்பைக் கதிர் எனவேண்டும். 'கம்பங் கதிர்’ என்று கேள்விப்படுகின்றோம். உருண்டு திரண்டு நீண்ட அமைப்பில் கம்பின் வித்துகள் ஒரு தண்டில் செறிந்து தொடர்ந்து மொய்த்திருக்கும். இவ்வமைப்பே 'கதிர்' எனப்படுவது. மிக நுண்ணிதான இதழ்கள் குழாய் வடிவில் மொய்த்திருக்கும். மொய்ப்பதிலும் அடர்த்தியாக மொய்ப்பதற்கு மூசுதல்’ என்னும் சொல் உரியது. வண்டுகள் அடர்த்தியாக மொய்ப்பதை, 'வரிக்கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப'3 என்றார் மாங்குடி மருதனார். இவ்வாறு பலாவின் மிக நுண்ணிய பூக்கள் கதிரில் மூசி இருப்பதால் 'பலா மூசு எனப்பட்டது. 'பலா மூசு என்னும் பெயரை நாம் பலாவின் பிஞ்சிற்கு வழங்கி வருகின்றோம். உண்மையில் பலாவின் பூக்கதிரே பலா மூசு' ஆகும். . இதன் தனிப் பூ ஒன்றை எடுத்துக் கண்டுவிடல் இயலாது. அத்துணை நுண்ணிது. நுண்ணிய இதழ்கள் கூடிக் குழாய் வடிவில் உள் தண்டில் மொய்த்திருக்கும். இக்குழாய்களே பின்னர் பலாச்சுளைகள் ஆகின்றன. இக்குழாய்ப் பூக்கள் மூசிய , 1 தனி, சி ; 81 3 மது, கா 1 717 ఖీ தொல் : எ | 227 உரை