பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 131 சொல்வது தப்பான சமாதானம் என்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. கட்டாரித்தேவன்வந்தால் அவன் இந்த மனிதனுடைய அடையாளத்தைக் கண்டு கொண்டாலும் கொள்வான். ஆகையால், நாம் அண்டாவில் இருக்கும் இவூனை வெளியில் எடுத்துதுப்பட்டியால் மூடித் தரையில் வைத்துவிட வேண்டும். இவன் யாரோ ஒரு திருடன் என்று நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன். ஆகையால், அவன் வருவதற்குள் நாம் எச்சரிப்பாக இருக்கவேண்டும். நேரமாகிறது; எழுந்திரு. அவன் வந்து அடையாளம் கண்டுகொண்டால், அதனால் பின் நமக்குப் பலவிதமான கெடுதல் வரும். முதலில், அவன் உன்னுடைய யோக்கியதை எவ்வளவு என்பதை அறிந்து கொள்வதோடு எப்போதாவது சமயம் வந்தால் இந்த இழிவை வெளிப்படுத்தினாலும் படுத்துவான். அதோடு, இறந்து போயிருக்கும் மனிதன் தக்க பெரிய மனிதன். ஆகையால், அவனைக் காணாமல் தேடித் தவித்துக் கொண்டிருக்கும் அவனுடைய சொந்தக்காரர்களிடத்தில் போய் ஏதாவது பணத்தை வாங்கிக்கொண்டு இந்த ரகசியத்தை வெளியிட்டு விடுவான். அவர்கள் அதிகாரிகளோடு வந்து குழியைத் திறந்து பிணத்தைப் பரிசோதனை செய்வதன்றி நம்மையும் கைது செய்வார்கள். அதன்ால் பலவிதத் துன்பமும் இழிவும் உண்டாகும். ஏற்கனவே நான் செய்துள்ள கொலைக் குற்றத்திலிருந்து தப்புவதற்கு நாம் எவ்வளவோ தந்திரங்களும் பிரயத்தினங்களும் செய்ய நேர்ந்தது. அந்த ரகசியத்தை இந்த கட்டாரித்தேவன் அறிந்து கொண்டிருப்பதால், இதையும் அவன் அறிந்து கொள்ள விட்டு நாம் இன்னும் அதிகமாக அவனுடைய வசத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது. ஆகையால் சீக்கிரமாக எழுந்திரு. நீ இந்த அண்டாவிற்குள் இறங்கி உள்ளே இருக்கும் பிணத்தை மேலே துக்கு. அதை நான் வாங்கி கீழ் வைக்கிறேன். உயிரோடு இருக்கும்போது இவன் உனக்குக் கரும்பு போல இனிப்பாக இருந்தான் போலிருக்கிறது. இப்போது இறந்து போன பிறகு மாத்திரம்