பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374


தோன்றி என்பதற்குக் குருதி - இரத்தம் என்னும் பொருளைப் பழைய அகரமுதலிகளும் சேந்தன் திவாகரமும் குறிக்கின்றன. குருதி செம்மை நிறத்தின் அறிகுறி. இக்குறிப்பை வைத்தே திப்புத்தோளார் என்னும் புலவர் இதனைக் குருதிப் பூ' என்றார். தோன்றி-தோன்-தோல்-தொல்-துல் என்னும் வேரடி யாலும் இதன் குருதிச் செம்மைப்பொருள் வெளிப்படுகின்றது. இலக்கியங்களும் குருதி, செந்தி, விளக்கின் எரி எனும் இவற்றின் தொடர்புடனே இத்தோன்றியைக் குறிப்பதும் நோக்கத்திற் குரியது. இவற்றுடன் இது பெற்றுள்ள அடைமமாழியும் சான்றா கின்றது. எங்கும் செம்மைத் தொடர்பான பொருள்களையே உவமைகளாகவும் அடைமொழிகளாகவும் பெற்றுள்ளது. வெண் தோன்றி என்று கருதும் அளவிலும் எங்கும் எவ்வகை அடை மொழியையும் பெறவில்லை. இவை யாவற்றாலும் காந்தளின் குருதிச் செம்மை நிறப் பூவே தோன்றிஆகும். எனவே, தோன்றி செங்காந்தள் பூ. சிவப்பு விளக்கு தோன்றி கொடியாலும் மலராலும் முன் கண்ட கோடலைப் போன்றதுதான். நிறந்தான் செம்மை. பொதுவில் கூறப்படும் காந்தளைப்போன்றதுதான் ஆனாலும் தனித்தவொரு மலராகவே பேசப்படுவது. ஏன்? . தோன்றியின் சொற்பொருள் அதன்செம்மையைவிளக்கியது. அதன் மலர்ச்சி வரலாற்றையும், அதற்குப் புலவர் காட்டிய உவமை களையும் காண்பதால் மற்றைய இரண்டினும் இதுவேறுபடுவதைக் assroof 5ussif. - இதன் நிறம் செம்மை என்றாலும் அச்சிவப்பு இதழ் முழுதும் நிறைந்திராது. முகைப்பருவத்தில் அடிப்பக்கம் பசுமை யாகத் தோன்றும் இதழ் விரிந்தால் இதன் அடிப்பகுதியில் பாதி மஞ்சளும், அதற்குமேல் கிச்சிலி நிறமும் முனை செம்மையுமாகத் தோன்றும். மலர் முற்ற முற்ற மஞ்சளும் கிச்சிலியும் படிப்படியாக நற்சிவப்பாகும். முழு மலர்ச்சி கொண்ட மலர் குருதிச் சிவப் புடையது. -