பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழ் இலக்கியக் கதைகள்

செல்லத் தம்பியருடனே மாவையில்வாழ் கருப்
பண்ணன் தெருவீதிக்கே
பல்லக்குத்தான் சுமந்தான் அது
நமக்கு ஓராயிரம் பொன் பரிசுதானே?”

எல்லப்ப = வள்ளல், அம்மையப்ப வள்ளலின் புதல்வராகிய திருவேங்கடராமன் சீராம வள்ளல் (ஸ்ரீராமவல்லக்கொண்டம நாயகர்), மாதைப்பதி வேங்கடேசன் = சொக்கநாதரைப் பாராட்டி உதவிய சில வள்ளல்கள்)

என்ற பாட்டு, சொக்கநாதர் வாயிலே அப்போது பிறந்தது. பல்லக்கு வேளாளர் தோள்களில் மாறியது. அவர் வள்ளலிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்று அதிலேறிக் கொண்டார். பல்லக்கு புறப்பட்டது. சகோதரர்கள் திரும்பினர். தியாகத்தை ஒராயிரம் பொன் பரிசுக்கு மதிப்பிட முயல்கிறார் புலவர் பாடலில்.

39. உலகம் பரந்தது!

தான் கூறிய அந்தக் கருத்தினால் கம்பரை மாத்திரம் சோழன் பழித்திருந்தால் அவரும் தம் தீவினையை நொந்து கொண்டு பேசாமல் போயிருப்பார். புலவர் சமூகத்தையே பழிக்கும் படியான சொற்களால் அவன் அந்தக் கருத்தைக் கூறியது தான் கம்பருடைய உள்ளத்தைச் சுட்டது. ‘பாவலர்கள் கூற்றினும் கொடியவர்கள்’ என்று சோழன் சொல்லி முடித்தபோது அதை அவரால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவருடைய தன்மான உணர்ச்சி உள்ளத்தின் அடித்தளத்தில் உரக்கக் கூவிக் குமுறி எழுந்து விட்டது. .

நடந்த நிகழ்ச்சி இதுதான். கம்பர் ஒருவருக்கு எழுதிக் கொடுத்த பாட்டு ஒன்றின் பொருளைப் பற்றிச் சோழன் அவைக்களத்தில் பேச்சு எழுந்தது. அப்போது கம்பரும் அதே அவையில் அமர்ந்திருந்தார். தம்முடைய அந்தப் பாடலுக்குச் சோழன் அவையிலிருந்த மற்ற புலவர்கள் கற்பித்துக் கூறிய