பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582


நேறுந்தண் தகரம் வகுளம் இவற்றை' வெறும் புதர்ை வெட்டுவது போன்று வெட்டி எறிவதைக் கணிமேதையார் காட்டி யுள்ளார். 'அணிமலர் வேங்கை மராஅம் மகிழம் மணிநிறங் கொண்ட மலை’2 என்னும் பரிபாடலும் மலையில் வகுளத்தைக் காட்டுகின்றது. எனவே வகுளம் குறிஞ்சி நிலக் கோட்டு மலர். இதன் பூ மிகச் சிறியது. அழகிய அமைப்புடையது. மங்கிய மஞ்சள் நிறங் கொண்டது. இம்மலரின் வடிவமைப்பைத் திருத்தக்க தேவர் தேர்க்காலின் வடிவமைப்பிற்கு ஒப்பிட்டுள்ளார். கோடு தையாக் குழிசியோ டாரங்கொளக் குயிற்றிய ஒடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம்'3 எனப்பாட, இதற்கு உரை வகுத்த நச்சர், - - 'குறட்டோடே ஆர்கள் அழுந்தத் தைத்துச் செய்த தேருருளை மேற்குட்டு வையாத தேருருளை, மகிழ், தேருருளை போலே பூத்தன -என்று விளக்கினார். எனவே, இம்மலரைத் தேர்க்கால் மலர்' எனலாம். இச்சிறுமலர் காம்பிலிருந்து கழன்று கீழே வீழ்கின்றது. இக்காட்சி ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே வீழ்வது போன்றதாகத் திருத்தக்க தேவர், 'மதுக்கலத் துரழ்த்துச் சிலம்பி வீழ்வனபோல் மலர்சொரிவன வகுளம்' என்று வண்ணித்தார். அளவாலும் நிறத்தாலும் கால் அமைப்பாலும் மகிழம், சிலந்தி போன்றதே. கம்பர் கொப்பூழ்க்கு இப்பூவை உவமையாக்கினார். இராமன் உருவைச் சொல்லாற் காட்டும் அநுமன் வாயிலாக, - ': . . . . . .பூவொடு நிலஞ்சுழித் தெழுமணி உந்திநேர்; இனி இலஞ்சியம் போலும் வேறுவனம் யாண்டரோ' =ளின் இராமனது கொப்பூழ்க்கு இலஞ்சியமாம் வகுளம் அன்றி வேறில்லை’ என்றார்: 1 தின்ை. 24: 1 8 சிவ், சி , 1650 2 அரி, திரட்டு 1 : 7, 9 4 சீவ, சி : 21.98