பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245


‘கருங்கோல் குறிஞ்சி மதன் (வலிமை) இல் வான் (வெண்மை) பூ' எனப்பாடிக் காட்டினார். பாண்டிய மன்னன் பாட்டில் மகளிர் உடல் நிறத்திற்கு உவமையானமையால் இதன் பொன்னிறம் தெரிகின்றது அம்மை யார் பாட்டு இதன் வெண்மை நிறத்தைச் சுட்டுகின்றது. 'குறிஞ்சிப் பூங்கோதை போலும் குங்குமம் த முலையில் ஆட'2 -என்றும் திருத்தக்க தேவர் இதன் செம்மை நிறத்தைக் காட்டியுள்ளார். மழை வண்ணக் குறிஞ்சி என்றொன்றுண்டு. இதன் நிறம் நீலம், வாடாக் குறிஞ்சி என்னும் பெயர் செந்நீல நிறத்தைச் சொல்கின்றது. இவ்வாறாக இப் பூ ஐந்து வண்ணங்களைத் தனித்தனியே பெற்று ஐவண்ணக் குறிஞ்சி' என்று பெயர் பெற்றது. தமிழகத்தில் மிகப்பெரும் பகுதியாக நீல நிறப்பூக்களே காணப்படும். இது தேனாலும் ஒரு சிறப்புடையது. பல்லாயிரக் கணக்கில் பூப்பதாலும் தொடர்ந்து சில காலம் பூப்பதாலும் தேனீக்கள் நிறையத் தேனைத் தொகுக்க வாய்ப்புண்டாகின்றது. இதன் தேனடை பெரிதாக அமையும். ஒரு மலைத் தலைவனது நாட்டைச் சிறப்பிக்கும் ஒரு தலைவி, "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண் டு பெருந்தேன் இழைக்கும் நாடன்' என்றாள். இதனால் இதன் தேன் தனிப் பூத்தேன் ஆகின்றது. கலயம் கலயமாகத் தேன் கிடைக்கும். இதன் தனித்தேன் சுவையிலும் சிறந்தது. தேனால் குறிஞ்சி பெறும் சிறப்பு இது. குறிஞ்சிப் பூ சூடும் பூ, மகளிர் காலையில் இம்மலரைத் தலையிற்செருகிக் கொள்வர். கோதையாகத் தொடுத்துக் கூந்தலில் சுற்றிக் கொள்வர். குறவர் குறிஞ்சிப் பூவைச் சூடிக் கை கோத்து நின்று குரவை ஆடுவர். கார்கால மலரை விரும்பிச் சூடுவர். ஆடவரும் தம் குஞ்சியில் கண்ணியாகச் சூடிக்கொள்வர். தாராக வும் அணிவர். 1 தற் : 268 : 8. 8 குறு : 8. 2. சிவ. சி : 1568,