பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


அத்தி த்ததும் ஆலங்காய் காய்த்ததும். அத்திப் பூ என்ற உடனேயே அத்தி பூத்தாற்போல, என்னும் பழமொழியும் நினைவிற்கு வரும். அதுவே அத்தி பூக்கும் என்பதைக் கூறுகின்றது. அருமையாகக் காணப்படுவோரை அத் தொடரால் குறிப்பிடுவதால் அத்திப் பூ அருமையாகக் கானப் படும் என்பதும் தெரிகின்றது. அஃதாவது காட்சிக்கு அரிதாக இருக்கும்; எளிதாக வெளிப்படையாகக் காண முடியாது என்பதாகும். ஆனால், பூவாது காய்க்கும் மரம் என்று ஒதுக்கி, கோளி பூவாது காய்க்கும் மரமே 204 -என்று அவற்றிற்குக் கோளி என்றொரு பெயரும் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஆல், அத்தி, கொழிஞ்சி உள்ளன. இது நிகண்டுகளின் பட்டியல் மேலும், - 'பூவாது பழுக்கும் ஆலடிப் பலா”9 என்று வேர்ப்பலாவை யும் கூட்டினர். ஒளவையாரும் 'சோல்லாமலே செய்பவரைப் பூவாது காய்க்கும் மரத்திற்கு ஒப்பிட்டுப் "பலாமாவை.....பார்' 8 என்று இதற்கு முன்மொழித்தார் சிறுபஞ்சமூலமும் 'பூவாது காய்க்கும் மரமுள' என்றது. இம்மரங்களில் ஆலமரத்தைக் குறிப்பாகக் காட்டினர். 'கோளி ஆலம்' என அடைமொழி கொடுத்துப் புறநானூறும் மலைபடுகடாமும் 9 பாடின. இவற்றைக்கொண்டு பூ இல்லாமலே காய் உண்டாகும் என்று கொள்ளலாமா? அவ்வாறாயின், நான் 'இனப்பெருக்கத்தின் மூலம் என்னும் அடிப்படையே அடிபட்டுப்போகும். . . பின் உண்மை என்ன? 20 4 ງູ. ຫຼຶ : 2265 - - 205 சித. மு. கோவை 8 , 17 208 தனி; சி . ஒளவையார் 81 207 சிறுபஞ்ச :22. 208 'முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து -புறம் 58 209 கோடுபல முரஞ்சிய கோலி ஆலத்து' -மலை :38,