பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பூர்ணசந்திரோதயம்-2 கட்டாரித் தேவன் தாறுமாறாகச் சென்று நெருக்கடியான ஓரிடத்தில் அகப்பட்டுக் கொண்டான். அவனுக்கு எதிரில் அந்த ஊரில் வரும் பெருத்த ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றில் சேரும் வண்டலும் நிறைந்து பதினைந்து அடி ஆழமுள்ள தண்ணிர்ப்பிரவாகம் போய்க்கொண்டிருந்தது. ஒரு மனிதன் நீந்துவதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அந்த மழை வெள்ளத்தில் விழுந்தால், தப்பிப் பிழைப்பது துர்லபமான காரியம். அப்படிப்பட்ட மகா பயங்கரமான வண்டல் வெள்ளம் நிறைந்த ஆறு எதிரில் குறுக்கிட்டது. இன்னொரு பக்கத்தில், நிரம்பவும் ஆழமான ஒரு படிக்குளம் இருந்தது. மூன்றாவது பக்கத்தில், ஆகாயத்தை அளாவியதும் அடர்த்தியாக நிறைத்து பரவியிருந்ததுமான சப்பாத்துப் புதர் இருந்தது. நான்காவது பக்கத்தில், போலீசார்துரத்திக்கொண்டு ஒடி வந்தனர். அப்படிப்பட்ட மகா இக்கட்டான இடத்தில் போய் அகப்பட்டுக்கொண்ட கட்டாரித்தேவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்; தான் எந்த வழியாகப் போனால் பிடிபடாமல் தப்பியோடி விடலாம் என்று யோசிக்கிறான். அவ்வாறு அவன் தயங்கி நின்ற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது. அவன் அவ்வாறு மலைத்து நின்றதைக் கண்ட போலீசார் முன்னிலும் அதிக விசையாகப் பாய்ந்து ஒடி வருகிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் நடுவிலிருந்த துரம் குறைந்து கொண்டே வருகிறது. இன்னம் இரண்டு நிமிஷ நேரத்தில் அவர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொள்வார்கள். 'அடேய் கட்டாரித்தேவா நீதிமிறாமல் எங்களிடம் வந்துவிடு. இல்லாவிட்டால், துப்பாக்கியின் ஒரே வெடியால், உன்னை எமபட்டணத்துக்கு அனுப்பி விடுவோம்' என்று ஜவான்கள் சொல்லிக்கொண்டு துப்பாக்கிகளை அவனுக்கு எதிரில் பிடித்தபடி நெருங்கி வந்துவிட்டார்கள். தான்.அவர்களோடு கை கலந்து பலாத்காரமாகத் தப்பி ஒட முயன்றால், அவர்கள் தன்னைச் சுட்டுவிடுவார்கள் என்ற அச்சம் உண்டானது. ஆகையால், தான் அவ்வாறு மரிப்பதைவிட கடைசி