பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பூர்ணசந்திரோதயம்-2 எவ்வித இழுக்கும் இல்லை என்றாள். தனம் என்பவள் அந்த மனிதரைத் தான் உடனே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறினாள். அம்மாளு என்பவளும் மற்ற சகோதரிகள் சொன்னதை உடனே ஆமோதித்தாள். அவர்களது அபிப்பிராயத்தை உணர்ந்துகொண்ட முத்துலகஷ்மி அம்மாள் மணியக்காரரைப் பார்த்து, "சரி; நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அவர் நல்ல யோக்கியமான மனிதராக இருப்பார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அவர் எங்களிடம் மரியாதையாகவே நடந்து கொள்வார் என்றும் நினைக்கிறேன். நமக்கும் ஆண்துணை அவசியமாக வேண்டியிருக்கிறது. தயை செய்து நீங்கள்போய், அவரிடம் மெதுவாகக் கேட்டுப் பாருங்களேன்? அவருக்கும் வண்டி வாடகை இல்லாமல் போகும். புதிதாக வண்டி தேடிப் பிடிப்பதும் இந்த ஊரில் அதிகப் பிரயாசையானது என்று நீங்கள் முன்னமேயே எங்களிடம் சொல்லி இருக்கிறீர்களே' என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட மணியக்காரர், ஏதோ தன்னால் செய்ய மிகவும் பிரயாசையான ஒரு காரியத்தைச் செய்யப் போகிறவர்போல, நிரம்பவும் கவலை கொண்ட முகத்தினராய், 'சரி; நான் போய் என்னாலான வரையில் முயற்சி செய்து பார்க்கிறேன்' என்று கூறியவண்ணம், அவ்விடத்தை விட்டு கலியாணசுந்தரம் இறங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். மணியக்காரரது முகத்தின் மலர்ச்சியைக் கண்ட கலியாணசுந்தரம் தனது எண்ணம் பலித்துவிட்டது என்றே உடனே நிச்சயித்துக் கொண்டு அவரைப்பார்த்து, 'என்ன சங்கதி? " என்ற கேட்க, மணியகாரர் நடந்த வரலாற்றை விவரமாக எடுத்துக்கூற, அதைக் கேட்ட நமது யெளவனப் புருஷன் நிரம்பவும் மகிழ்ச்சி அடைந்தவனாய், உடனே அந்த மணியக்காரருக்கு நல்ல வெகுமதி செய்து அனுப்பி வைத்தான். அளவற்ற சந்தோஷத்தோடு அந்த லஞ்சத்தைப் பெற்றுக்