பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

143

கனியக் கனியச் சுவை மிகுந்து இனிக்கும் பழம்போல் சொல்லிச் சொல்லி ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய சொற் சித்தரம் இது. கன்னல், மின்னல் என்று மென்மையான சொற்களைச் சொல்லும்போதே வித்தில்லாத திராட்சைக் கனியை உண்பது போலிருக்கிறது.

ஒவியம் காட்சிக்கு மட்டுமே இன்பம். சொற் சித்திரமோ, கருத்துக்கும் காட்சிக்கும் அழகிய அநுபவத்துக்கும் சேர்த்து இன்பம் தருகிறது. நிறங்களை ஒன்றுபடுத்தி அழகு சமைக்கும் ஒவியர்களைக் ‘கண்ணுள் வினைஞர்’ என்று அழைக்கும்போது சுவைகளும் உணர்வுகளும் ஒன்றுபட்டு உருவாகும் சொற் சித்திரங்களை எழுதும் இம்மாதிரிக் கவிஞர்களைக் ‘கருத்துள் வினைஞர் என்று அழைத்தால் எவ்வளவு பொருத்தமாயிருக்கும்? அவர்கள் கண்ணுக்கு மட்டும் பார்க்க முடிந்த சித்திர மெழுதுகிறார்கள். இவர்கள் கருத்துக்கும் சேர்த்துக் கருத்தினாலும் பார்க்க முடிந்த சித்திரங்களை எழுதுகிறார்களே!

49. பாழடைந்த வீடு

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் சாளுவ நாயக்கன் பட்டணம் என்று ஒர் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குப் பெயர் ஏற்படக் காரணமான சாளுவ நாயக்கர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை இந்தக் கதையில் காண்போம்.

விசயநகரப் பேரரசின் ஆட்சி தமிழ்நாட்டிலும் பரவியிருந்த காலத்தில் அவ்வரசனின் தென்னாட்டுப் பிரதிநிதிகளாகப் பலர் அங்கிருந்து அனுப்பப் பட்டிருந்தனர். ஆட்சிப் பொறுப்பையும், பிற செயல்களையும் அங்கங்கே தங்கி நிர்வாகம் செய்ய இந்தப் பிரதிநிதிகள் பயன்பட்டனர். சாளுவ நாயக்கர் இப்படிப்பட்ட வகையில் பயன்படத் தென்னாட்டில் வந்து தங்கியிருந்த காலத்தில் தத்துவப் பிரகாசர் என்றொரு புலவர் இருந்தார். அவருக்குச் சைவ