பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83 கோபமும் குரோதமும் பாராட்டி, தான் அன்றைய தினமே தனது உறவினரான பெரிய பண்ணைப் பிள்ளையிடம் போய் அந்த விவரங்களை எல்லாம் சொல்லி அந்த போலிச் சாமியாருக்குத் தக்கபடி சிட்சை நடத்திவைப்பதாகவும், அவனாலும் அவனது ஆள்களாலும் அவளுக்கு இனி எவ்விதப் பொல்லாங்கும் நேராது என்றும் உறுதி கூறியதன்றி, அன்றைய இரவிலும் முதல் நாளிரவில் செய்ததுபோல தான் சில ஆட்களை நியமித்து பங்களாவின் வெளியில் காவல் காத்திருக்கும் படி செய்துவிட்டுப் போவதாகவும், கமலம் திரும்பி வருகிறவரையில் அவளுக்கு எவ்வித இடரும் நேராமல் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறி, அவளிடம் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் போய்விட்டான். மறுநாளைய பகல் மூன்று மணிக்கு அந்த சுந்தரரூபன் மறுபடியும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். அப்போது ஷண்முகவடிவோடு வேலைக்காரியும் இருந்தாள். ஆகையால், அவன் முதல் நாளைப் போல் லஜ்ஜைப்படாமல் தாராளமாக அந்த வேலைக்காரியுடன் சகலமான விஷயங்களையும் பேசினான். ஷண்முகவடிவின் இடத்திலிருந்து முரட்டு மனிதர்கள் அபகரித்துக்கொண்ட பணம், ஆடைகள், சாமான்கள் முதலியவற்றையும் அன்றையதினம் மீட்டுக் கொணர்ந்து அவன் அவர்களிடம் கொடுத்தது அன்றி, ஷண்முகவடிவிற்கு நேர்ந்த அபாயத்தை எல்லாம் தான் பெரிய பண்ணைப் பிள்ளையிடம் தெரிவித்ததாகவும், அவர் உடனே பண்டாரத்தையும், முரட்டாள்களையும் தருவித்து மரத்தில் கட்டி அடித்து, அந்தச் சாமான்களையும் பணத்தையும் தருவித்துக் கொடுத்ததாகவும், அந்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் கபட சந்நியாசி அந்த ஊரை விட்டு எவ் விடத்திற்கோ ஒடிப்போய் விட்டதாகவும் கூறினான். அந்த விவரங்களை எல்லாம் கேட்ட ஷண்முகவடிவும், முத்தம்