பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

513

 என்றெழுதினார். அரும்பத உரையாசிரியர், கடம்பு’ என்று எழுதி, மேலும் "குங்கும மரமுமாம் என்று குறித்துள்ளார். இஃது எவ்வகையில் என்பதற்கு நிகண்டு தவிர வேறு சான்று இல்லை. இலையுதிர்ந்த நிலையில் இம்மரத்தின் நிழல் கோடு கோடாகத் தோன்றுவதை 'வரி நிழல்' என்றனர். இந் நிழல் வலை கட்டினாற் போன்றது என்பதை 'வலை வலந்தன்ன மென்னிழல்'(பொருந் : 51) என்றார் முடத்தாமக் கண்ணியார், எனவே, இங்குமுதலில் வெண் கடம்புப்பொருள் தொடர்பில் மராஅம் பற்றி அறியலாம். 9. (அ) மராஅம்-வெண்கடம்பு. மராஅம் பூவைத் தரும் மரம் பெரியது. ஆலமரத்துடன் சேர்த்துப் பேசப்படுவது. 'மள்ளர் அன்ன மரவம் தpஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும்' -என இம்மரம் வீரனாகக் கூறப்படும் அளவில் உறுதி வாய்ந்தது. 'ஆலமும் தொல்வலி மராஅமும்’ (கவி 101 , 13) என்று இதன் வலிமை உறுதி குறிக்கப்பட்டுள்ளது. 'நல்லரை மராஅத்த', 'திரள் அரை மராத்து', 'பொரி அரை மராஅம்' 'நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை', 'இலை யில் மராத்த’ என்பவற்றால் இம்மரத்தின் அடிப்பகுதி, நன்கு 'திரண்டது; பட்டை பொரிந்தது; உயரமானது என்றும், இதன் கிளை சிறியது என்றும், இலையுதிர் மரம் என்றும் அறியலாம். மேலும், மேலே காணப்பட்ட அடிமர அமைப்பின் மேல் மரம் உயர்ந்து நீண்டது என்ற குறிப்பையும் கொள்ள 'வேண்டும். நெடுங்கால்’ என்று குறிக்கப்பட்ட பகுதி, 1 ஐங் : 400 : 1, 2. 米83