பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690


முற்காலத்தில் மலருக்கிருந்த நிலையைப் பிற்காலத்தில் இலை பெற்றது. 'கள்ள ணி பசுந் துளவின் அவை" - என்னுந்தொடரில் “அவை என்னுங் குறிப்பு, பூவொடு இலையைக் கூட்டியதாகும் 'பசுந் துளவு' என்றபடி இப்பூவின் புறவிதழ்க் கிண்ணத்தின் பசுமை மேம்பட்டுத் தோன்றும். இலையின் பசுமையும் குறிக்கப் பட்டது. "கள்ளணி' என்றது போன்று-, "நக்கலர் துழாய் நாறு இணர்" (பரி:4:58) 'கமழ் குரல் துழாய்' (பதிற்:31:8) - என்பனவும் இதன் மலரையும் அது கொத்தாக அமைந்ததையும் குறிக்கின்றன. இப் பூ கவிழ்ந்த புறவிதழ்க் கிண்ணங்களைக் கொண்டது. இக்கிண்ணங்கள் மூன்று, ஒரு காம்பில் பக்க வரிசையாக அமைந்திருக்கும். இதுபோன்று பக்கத்தில் மூன்றிருக்கும். இவ்வாறு ஆறும் அரை வட்டமாக அமைய இவ் வரைவட்டம் தட்டு தட்டாக மேல் அடுக்கமைப்புடையது. வளமான செடியில் 20 தட்டுகள் வரை அமைந்திருக்கும். இவ்வாறு மூன்று நான்கு காம்புகள் அமைந்த கொத்து மலராகும். இப்பசுமைக் கிண்ணம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மிகச் சிறிய வெண்மை நிற மலர் பூக்கும். எனவே, இப் பூவின் நிறம் வெண்மை . இது முல்லை நிலப் பூ. இது சில பருவங்களில் பூக்குமாயினும் கார்ப்பருவம் அதற்குரியது. சிவனுக்குக் கொன்றை போன்று திருமாலுக்கு இத்துழாய் உரியதாயிற்று. இதனால் திருமால் துழாயோன்' எனும் பெயர் பெற்றார். தற்காலத்தில் பூவின் பயன் அருகி, இலையே பயன்படுகின்றது. இலையையே மலராகக் கொள்வர். இதனைப் பாடாத திருமாலியத்தார் இலர் எனலாம். இல் விலை மருந்துப்பயன் கொண்டது. தேரையன் பாடல் "துளசி யின் இரசம் துய்த்திடச் சுரப்பிணி அளவுநோய் இனமெலாம் அறுவது திண்ணமே -என்றது. திருமாலின் அருள் வழங்கலாக இவ்விலையிட்ட நீர் கோவில்களில் வழங்கப் படும். ஆன்மிகத் தொடர்பில் இது "திருத்துழாய்' எனப் பட்டமைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் 'HOLY BASIL எனப் பட்டது. திருத்துழாய் திருமாலிய இலை-மலர். - 115.