பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


கீழே விழுமுன்- வண்டுகள் வாய்வைக்காமுன் பறிக்கவேண்டு மென்றே அடியார் முந்துவர். பூவிருக்கப் பச்சிலையை வழிபாட்டிற்குக் கொண்டதற்குத் தாயுமானவர், எச்சிலென்று பூவை இகழ்ந்தோர்க்கு உனைப்போற்றப் பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே 1, 7 -என்று பூ, வண்டின் எச்சிலால் தூய்மையிழப்பதையும் அதனால் இகழ்ச்சி யடைவதையும் சுட்டிக் காட்டினார். எச்சிலால் இகழ்ச்சி அடையாத என் தூய்மை புகழ்ச்சிக்குரியது அன்றோ ? இவற்றையெல்லாம் கொண்டே சான்றோர் பலரும் என்னைத் துாமலர் வாடும்', 'தூயமாமலர்', 'துமலர் மாலை' -என்றெல்லாம் போற்றினர். என்னைக் காண்பதே க ண் ணி ற் குக் குளிர்ச்சி. கண்ணில் ஒற்றினால் தண்னென்றி ருப்பேன். கண்ணின் வெப்பந் தணிக்கஎன்னை ஒற்றிக்கொள்வர். கண் வெப்பம் என்ன ? உடல் வெப்பத்திற்கும் எனது தண்மை நலந்தரும். 5. தன்மைத் தகுதி பத்துத் திங்கள் வயிற்றுள் கிடந்து குழந்தையை ஈன்ற தாயின் அடிவயிறு வெப்பத்தில் நிற்கும். அப்படி ஒரு அரிவை கட்டிலில் கிடக்கின்றாள். அரிவையின் அத்தான் பக்கத்தில் அமர்ந்துள்ளான். கையில் ஒரு குவளை மலர். அதனால் அவளது அடிவயிற்றில் ஒற்றி ஒற்றி எடுக்கின்றான். அக்குளிர்ச்சியில் -தண்ணிய இன்பத்தை அவள் கண்மூடிச் சுவைக்கின்றாள். அவன் பின்னொரு நாள் நினைவுப் படுத்தி பேசுகின்றான் : 'துஞ்சு தி யோமெல் அஞ்சில் ஒதி எனப் பன்மாண் அகட்டில் (அடிவயிற்றில்) குவளை ஒற்றி உள்ளினென்'118 -என்று குவளைப்பூவின் குளிர்நலத்தைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினான். - 117 தாயு. பா : பராபரக்கண்ணி : 2 118 நற் : 370 -