பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வ. உ. சியும் குடும்பக் கட்டுப்பாடும்

நானும் என் மனைவியும் 1934ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலுள்ள என் தங்கை வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது அங்குள்ள சில நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் இந்த நல்ல விஷயத்தை எங்களுக்கு மட்டும் சொன்னால் போதாது. ஒரு கூட்டம் கூட்டுகிறோம், பொதுமக்கள் எல்லோருக்கும் கூறவேண்டும். நாட்டின் நலத்துக்கு அத்துணை அடிப்படை விஷயமாய் இருக்கிறதே இது என்று கூறினார்கள்.

அவ்விதமே அவர்கள் அன்று மாலை ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு டாக்டர் தலைமை வகித்தார். இக் காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்று கூறுவதை முற்காலத்தில் பச்சையாகக் கருப்பத்தடை என்று கூறினோம். அதனால் கூட்டம் சிறியதாகவே இருந்தது. ஆயினும் நான் விஷயத்தை விளக்கியபோது வந்திருந்த மக்கள் உற்சாகம் காட்டினார்கள். எனக்கும் அதுதான் முதன் முதலாகக் கருப்பத் தடை பற்றிப் பேசிய பொதுக்கூட்டம். வந்திருந்தவர்களும் முதன்முதல் இந்த விஷயத்தைக் கேட்பது அப்போதுதான்.

மறுநாள் காலையில் நானும் என் மனைவியும் தேச பக்தர் சிதம்பரனார் அவர்களைப் பார்ப்பதற்காகப் போனோம். அவர்கள் என்னைக் கண்டதும் என்ன