பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தாய்க்கும் குழந்தைக்கும் குளிர் தாங்கமுடியாமல் கஷ்டம், இப்படி எத்தனையோ துன்பங்கள்.

நான் : நீங்கள் கூறுவது உண்மைதான். அதனால் தான் நான் நேற்று மழை காலத்திலோ பனிக்காலத்திலோ குழந்தை பெறாமல் நல்ல சுகமான வசந்த காலத்தில் குழந்தை பெறவேண்டும் என்று கூறினேன்.

வ. உ. சி : ஆமாம் தம்பி ! பங்குனி சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி இந்த ஆறு மாதங்களிலும் மழையில்லை, பனியில்லை, குளிரில்லை. இந்தக் காலத்தில் பெறுவதுதான் நல்லது; ஆனால் அதற்கு வழி என்ன, சொல்லுங்கள்.

நான் : அதற்கு வழியிருக்கிறது, மிகவும் சுலபமான வழி, எல்லாப் பயிருக்கும் எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுக்கவேண்டும் என்ற கால அளவு உண்டு.

வ. உ. சி : ஆமாம் அது உண்டு, அதற்கும் குழந்தை பெறுவதற்கும் என்ன சம்பந்தம் ?

நான் : என்ன இப்படிச் சொல்லுகிறார்கள் ? மக்கட் பயிருக்கும் கால அளவு எல்லோர்க்கும் ஒன்றுபோல் தானே.

வ. உ. சி : மக்களையும் பயிர் என்றே சொல்லுகிறீர்களா? அதுவும் பொருத்தம்தான்.

நான் : பாருங்கள், மக்கள் பயிர்க்கு எப்போதும் பத்து மாதம் என்று சொல்லுவார்கள், ஆனால் கணக்காகப் பார்த்தால் 280 நாட்களே.

வ. உ. சி : அப்படியானால் பத்து மாதங்கள் என்பது சந்திர மாதங்களாக இருக்கும். சந்திர மாதம் என் பதற்கு 28 நாட்கள்தான்.

நான் : ஆமாம் நீங்கள் சொல்வதுதான். அதனால் எந்த மாதம் குழந்தை பிறக்கவேண்டும் என்று எண்ணு