பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718

 காவிதிப் பட்டம் பெறுவோர்க்கு மன்னன் சிற்றுரைப் பரிசாக வழங்குவான். அச் சிற்றுார் 'காவிதிப் புரவு' எனப் பட்டது. இத்தொடரில் 'புர வு' என்னுஞ் சொல்லால் ஒரு கருத்தைப் பெறலாம். புரவு' என்பது பலபொருள் ஒருசொல். அவற்றுள் இங்கு 'கொடை, ஆற்றுப் பாய்ச்சலுள்ள ஊர்' என்னும் இரண்டு பொருள்கள் பொருத்தும். வயல்(ஊர் குறிக்கப்படுவதால்(இம்மலர் மருத நிலத்து மலராகலாம். இவ்வகையில் செங்கழுநீர் ஓரளவில் இயைந்து வரலாம். அனிச்சம் போன்று இப் பூவும் காட்சிப்படும் வரையில் செங்கழுநீராகக் கொள்ளலாம். இஃதும் சான்றற்ற உய்த்துணர்வே. காவிதிப் பட்டத்தாரிலும் சிலர் "பெருங்காவிதி' எனப் பட்டனர். அவர் அரசின் கணக்காளர் பணியை மேற்கொள்ளும் தகுதியுடையோராக விளங்கினர். இப்பணி காவிதிமை' எனப் பட்டது. இதனைக் கல்வெட்டு ஒன்று, "காவிதிமை செய்ய ஒருவனுக்கு அரையன் மணவிலிங்கனான செம்பியன் பெருங்காவிதி' - என்று கூறுகின்றது. இத்துணைச் சிறப்பிற்கு இடம்பெற்ற காவிதிப் பூ இக்காலத்தில் அறியவும் அரியதாகியுள்ளது. காவிதி என்றொரு பூ உண்டு. அது மருத நிலத்தது. இவ்வளவே குறிக்கத்தக்கது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 2 : பக்கம் 21