பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472


கோங்கம் போன்று குரவமும் பாலை நில மரம். "குரவம் மலர மரவம் பூப்பச் கரன் அணிகொண்டன்று கானம்' -என்னும் அடி களாலும், ஐங்குறு நூற்றின் 369 ஆம் பாடலுக்கு அதன் உரை காரர், "இது பாலைக்குரித்தாகிய வேனிற்கண் நிகழும் குரவும் குயிலும் கூறுதலால்'-என்பதாலும் குரவ மலர் பாலை நில மலர் 'பின்பணி அமையம் வருமென முன்பணி கொழுந்து முத்துரீஇக் குரவு அரும்பினவே”2 -என்றபடி முன்பனிக் காலத்தில் இம்மரம் கொழுந்துவிட்டு அப்பருவ இறுதி யில் அரும்பை ஈனும். பின், “... ... ... ... ... ... குரவு மலர்ந்து அற்சிரம் (பனிக்காலம்) நீங்கிய அரும்பத வேனில்'3 -வருவதைக் குறிப்பதன்படி இளவேனிற்பருவத்தில் மலர்ந்தும் காய்த்தும் விளங்கும். இதன் காய் பாவை’ என்னும் சிறப்பால் காய்ப்பருவமும்கொண்டு இது இளவேனிற் பூவாகியது. ஐங்குறு நூற்றில் இளவேனிற் பத்தில் இக்குரவம் குறிக்கப்படுவதும் துணையாகின்றது. எனவே, குரவ மலர் இளவேனிற் பருவ 擅鸟5D衍”, இதன் அரும்பு, "அரவு எயிற்றன்ன அரும்பு முதிர் குரவின்ட்சு -என்றபடி பாம்பின் பல் போன்ற வடிவுடையது. பாம்பின் பல்போன்று அரும்பும் பூக்களைக் குறிக்கும், 'குரவும் தளவும் குருந்தும் கோடலுந் அரவுகொண்டு அரும்ப' - எனும் கொங்கு வேளிர் பாடலும் பொருந்துகின்றது. இதனைக் கபிலர் 'பல்லினர்க் குரவம்" என்றார். இங்கு இணர் என்பது அதன் பல இதழ்களைக் குறிக்கும். இவ்வாறே இதற்கு நச்சரும் உரை எழுதினார். கச்சிப்பேட்டு இளந் தச்சனாரும்

ஐங் : 857 4 அகம் : 237 : 8, 2 நக 224 : 2, 8 5 பெருங்; உன் : 49 : 98, 99 3 அகம் : 97 :16, 11, § “”” . o 8,