பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பூர்ணசந்திரோதயம்-2 இருந்த பயங்கரமான ஒரு பொட்டல் வெளியில் நான் இருக்கக் கண்டேன். அவ்விடத்தில் கண்கண்ட தூரம் வரையில் வீடாவது தண்ணிராவது காணப்படவில்லை. மரங்கள் மாத்திரம் இருந்தன. நான் நிரம் பவும் களைத்துப் போயிருந்தேன் ஆகையால், ஒரு மரத்தின் அடியில் படுத்துக் கொண்டி ருந்தேன்" என்றாள். அந்த மகா பரிதாபகரமான வரலாற்றைக் கேட்கவே என் மனம் பதறிப் போய்விட்டது. நான் உடனே அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஆகா! என்ன ஆச்சரியம்! உலகத்தில் இப்படிப்பட்ட அட்டுழியமும் நடக்குமா! இப்படிப்பட்ட கொடும் பாவிகளான மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்களா! நீ சொன்ன வரலாறு உண்மையான தென்றே, என் மனம் நம்பமாட்டேன் என்கிறதே! அது போகட்டும். நீ அந்தப் பொட்டல் வெளியில் நேற்றைக்கு முந்தியநாள் காலையில் அல்லவா மரத்தடியில் படுத்தது. அதுமுதல், நேற்று ராத்திரி ஒன்பது மணிக்கு நான் உன்னைக் கண்டுபிடித்தவரையில் நீ எங்கே இருந்தாய்? அதை முன்னால் தெரிவி" என்றேன். உடனே அந்தப்பெண், 'நேற்றைக்கு முந்தியநாட் காலையில் நான் அந்தப் பயங்கரமான பொட்டல் வெளியில் மரத்தடியில் குளிர்ந்த மணலின்மேல் படுத்தேன் அல்லவா. முதல் நாள் இரவெல்லாம் முள்ளிலும் கல்லிலும் விழுந்து அலைந்து திரிந்ததனால், என்னுடைய கால்கள் முற்றிலும் தளர்ந்து தள்ளாடின, உடம்பு முழுவதும் கடுமையான வலியும் அயர்வும் உண்டாயின. தாகத்தினால் நாவறண்டு போயிற்று. அந்த நிழலிலிருந்த மணலின்மேல் நான் உட்கார்ந்தது எனக்குப் பிரம் மானந்த சுகமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் நான் அப்படியே தூங்கிப் போய்விட்டேன். வெகுநேரம் வரையில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். சூரியன் கிழக்கிலிருந்து உச்சிக்குப்போய் மேற்குப் பக்கமாகச் சாயத் தொடங்கியது. அப்போது நான் இருந்த இடத்தில் வெயில் அடிக்க ஆரம்பிக்கவே, கொஞ்ச நேரத்தில் அந்த வெயில் என் உடம்பில் கடுமையாகத்