பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தமிழ் நாடும் மொழியும்


கொல்லத்திலிருந்து நெல்லூர் வரையிலுள்ள கடற்கரையைக் குறிக்கலாயிற்று. பாண்டிய, சோழர் காலக் கல்வெட்டுக்கள் அக்கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறியப் பேருதவி புரிகின்றன. தமிழர்கள் இந்த இடைக்காலத்தில் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த உரிமையோடு உலவினர். அஃதோடு அவர்கள் பல அன்பளிப்புகளும் தந்தனர். அடிமைமுறை அக்காலத்தில் நிலவியது. திருமறைக்காட்டிற் காணப்படும் மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுக்கள் இரண்டு, ஆரியன்பிச்சன் என்பான் 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 காசுக்கு விற்றதாகக் கூறுகின்றன. சதியும் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் மனைவியாகிய வானவன் மாதேவியும், ஒரு மல்லன் மனைவியாகிய தேக்கபியும் உடன்கட்டை ஏறியதாகத் தெரிகிறது. சாதிவெறி அக்காலத்தில் கடுமையாகவே இருந்தது;

நிலங்கள் மன்றங்களுக்கும், தனியாருக்கும் சொந்தமாய் விளங்கின. வைரமேகதடாகம், வீர சோழன், கீர்த்தி மார்த்தாண்டன் முதலிய குளங்களாலும், கால்வாய்களாலும் வேளாண்மை செழிப்பாக நடைபெற்றது. கோவில்கள் மிகவும் சீரும் சிறப்பும் கொண்டு திகழ்ந்தன. கோவிற்குப் பல ஆயிரம் பணம் பெறுகின்ற நகைகள் தேவைப்பட்டன. இதனால் நகைக்கலை செழித்தது. காஞ்சியிலும், மதுரையிலும் கைத்தறித் தொழில் ஓங்கியது. குமரி முனையிலும், மரக்காணம் (தென்னார்க்காடு) என்ற இடத்திலும் உப்பளங்கள் மிக்கு விளங்கின. நாட்டில் பொதுவாக நிலவிய வட்டி விகிதம் 12 1/2%. உறுதித் தாள்கள் (Promissory notes) நடைமுறையில் இருந்தன. 72 தானிய எடை உள்ள காசு அல்லது மடை என்ற தங்க நாணயமும் அக்காலத்தில் பழக்கத்திலிருந்தது. காசு என்பது அரைப்பொன். கழஞ்சு