பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலப் பாண்டியர் வரலாறு

135


என்பது நாணயமாக வழங்காத தங்கமாகும். நாணயங்களில் வில், கயல், புலி பொறிக்கப்பட்டிருந்தன. மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே பெருத்த வாணிகம் நடைபெற்றது. மூன்று தூதுக் குழுக்களைச் சீனாவிற்குப் பாண்டியன் அனுப்பினான்.

இக்காலத்தில் சைவமும் வைணவமும் நன்கு வளர்ந்தன. சமயப்பொறை நிலவியது. எனினும் சில போழ்து சமய வெறியும் கொலைகள் பல நடத்தியது. காளமுகம், பாசு பதம், கபாலிகம் முதலியனமிகுந்த செல்வாக்கோடு உலவின. மடமும், கோவிலும் பண்பாட்டுக்கும் கல்விக்கும் உறைவிடங்களாகத் திகழ்ந்தன. சுருங்க உரைப்பின், அக்காலக் கோவில்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகளாகவும், நிதியகங்களாகவும், செழுங்கலை நிலையங்களாகவும், கலைக்கண்காட்சிகளாகவும், பொருட்காட்சி சாலைகளாகவும், மருந்தகங்களாகவும், அற நிலையங்களாகவும் திகழ்ந்தன. பெரும்பாலான கோவில்களில் நூல் நிலையங்கள் இருந்தன. நாடகமும், நடனமும் நன்கு வளர்க்கப்பட்டன. நெல்லைக்கருகிலுள்ள பத்தமடைக் கல்வெட்டு ஒன்று, திருவிழாக்களில் நடனமாடவும், நாடகம் நடிக்கவும் ஒரு நடன மங்கைக்கு நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது எனக் கூறுகிறது. சமண, பௌத்த சமயங்களும் ஓரளவுக்கு அடியார்கள் மிகப்பெற்றிருந்தன. சமணம் பௌத்தத்தைவிட நன்கு செல்வாக்கோடு திகழ்ந்தது என்னலாம்.

இடைக்காலத்திலே தமிழிலக்கியமும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது என்னலாம். சமண, சைவ, பௌத்த, வைணவ அடியார்களால் பல அழகிய தமிழ் நூற்கள் எழுதப்பட்டன. திருத்தக்க தேவர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியை எழுதினார். சிதறிக் கிடந்த சைவ நூற்களைத் திருமுறை என ஒரு ஒழுங்குபடத்