பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பூர்ணசந்திரோதயம்-2 எதற்காக இங்கே வந்து இப்படி ஒளிந்து கொண்டிருக்கிறார், அந்த விவரங்களைக் கேட்டால் அன்றி என் மனம் சாந்தப்படாது?" என்று இரக்கமாகக் கூறினாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை கோபம் கொண்ட நாகம் போலச் சீறி அவளைக் கடிந்து, 'மறுபடியும் துவக்கிவிட்டாயா உன்னுடைய பாட்டை? நான்தான் எல்லா விவரத்தையும் ராத்திரியே சொன்னேனே. அதை நம்பாமல் அடிக்கடி அறித்துக் கொண்டிருக்கிறாயே! இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ ஏன் இதைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகிறாய்? யாரோ வந்தால், இரண்டொரு நாள் இருந்துவிட்டுப் போகிறான். குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும் என்கிறபடி, எதைக் கண்டாலும் உனக்குப் பயமாக இருக்கிறதோ? உன்னுடைய ஆசைநாயகனை வென்னிர் அண்டாவுக்குள் நீ வைத்துக் கொன்றாயே; அதை யாராவது கண்டுகொண்டார்களோ என்று பயப்படுகிறாயோ? நீ ஏன் இப் படிக் குத்திக்குத்திக் கிளறுகிறாய்? இப்படி நீ ஓயாமல் தொணதொணவென்று அநாவசியமான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது எனக்கு நிரம்பவும் தொந்தரவாக இருக்கிறது. இனிமேல் இதை நான் கொஞ்சமும் சகித்திருக்க முடியாது. நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் நீ மறுபடி மறுபடி என்னை வதைக் கிறாயே; என்னோடு ஏதாவது சண்டைபோடவேண்டுமென்கிற பிரியமா அப்படியானால் அதையாகிலும் திறந்து சொல்லிவிடு. நானும் அதற்கு ஆயத்தமாகிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்து விடுவோம்' என்று கூறி அவளை பயமுறுத்தினார். அவரது சொற்களிலிருந்து அவர் தன்னை நிரம்பவும் கொடுமையாக நடத்த எண்ணுகிறார் என்று கண்ட பெண் கலக்கமும் அச்சமும் அடைந்து, "சரி; நான் எதையும் கேட்கவும் இல்லை. நமக்குள் கலகமும் வேண்டாம்' என்று பணிவாக மறுமொழி கூறிவிட்டுத் தனது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு