பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386


இருவர் பாட்டிலும் முனை என்றும்முகை என்றும் உள்ளமை கவனத்திற்குரியவை. முகையின் திரட்சியும் முனைக் கூர்மையும் நீட்சியும் ஆகிய வடிவமே யானைக் கோட்டிற்கு உவமையாயிற்று. இது வடிவு உவமை, முழுதும் வண்ண உவமையன்று. முனையில் செம்மை நிறத்தால் ஆன அளவில் உவமை, வண்ண் {Q_6)16?)Lp. யானையினது முகத்தில் அமைந்த வரிகளுக்கும் புள்ளிகளுக் கும் காந்தட் பூவை உவமையாக்கினர். - தீக்குளித்த வண்டு ஒரு குரங்கு சிறுமலைப்பக்கம் நின்று எதையோ கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று கைகளை நெறித்துக் கொண்டு துள்ளித் துள்ளிக் குதித்துக் கத்தியது. அவல ஓசை கொடுத்தது.என்ன நடந்தது? 3 - வளப்பமான இதழ்களையுடையதாகக் காந்தள் மலர்ந்திருந்தது. ஆர்வத்தோடு பறந்து வந்த வண்டு இதழ்களுக்குள்ளே தேன் பருகப் புகுந்தது. இதனைக் கண்டுதான் குரங்கு,

  • I .. ...வண்டு

செந்தீ முழுகியது என்று அஞ்சி' . - எழுந்தெழுந்து கைநெறித்ததாம். வண்டு தீக்குளித்ததிாச்சி கருதிய குரங்கையும், குறும்புக் குரங்கிற்கு எழுந்த அருள் உணர்வையும் ஈங்கோய் என்னும் மலையில் மலர்ந்த காந்தளால் காட்டியது, ஈங்கோய் எழுபது என்னும் நூல். காந்தள் இவ்வாறு நெருப்பாகியது. ஒரு வண்டு தீக்குளிக்க மற்றொரு வண்டினமாம் தும்பி நீல மணியாகியது. காந்தட் பூவின் தேன் பருக ஒரு தும்பி அதனை ஊதியது. நீண்டிருந்த காந்தளின் துடுப்பு பாம்பின் உடல் போன்றிருக்க, அதன் முகை பாம்பின் தலைபோன்றிருக்க: அதனை அணுகி ஊதிய நீல நிற வண்டு, : است تیم منچه