பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 117 திடுக்கு திடுக்கென்று நடுங்கியதாகக் காணப்பட்டதன்றி, அவளது கை கால்களெல்லாம் காற்றில் அசையும் மாந்தளிர் போல நடுங்கிக் கொண்டிருந்ததாகத் தோன்றின. ஆனால், சகிக்க இயலாத குளிர் காற்று வீசியதனாலோ, அல்லது, அவளது உடம்பில் ஜூரம் முதலிய நோய் இருந்ததாலோ, அவளது தேகம் அப்படி நடுங்கியது என்று நாம் நினைக்க ஏதுமில்லாமல் இருந்தது. ஏனென்றால், அப்போது மந்த மாருதம் வெகு இனிமையாக வீசிக்கொண்டிருந்தது. அன்றி, அவளது உடம் பில் சூடு முதலிய எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை. ஆகையால், அவள் நடுங்கியதற்கு அவளது மனதின் நிலைமையே காரணமாக இருக்கலாம் என்று யூகிக்க வேண்டியிருந்தது. அவளது பல் வரிசைகளும், மார்கழி, தை மாசங்களில் நிகழ்வதுபோல நடுநடுங்கி ஒன்றோடொன்று சடசடவென்று மொத்துண்டன. அவர்கள் இருவரும் எந்த மாளிகையை நோக்கி நடந்தார்களோ அது அரைக் கால் மயில் நீள அகலம் உள்ளதும் மதில் சுவர்களினால் சூழப்பட்டதுமான ஒரு பூந்தோட்டத்தின் நடுவில் அமைந்திருந்தது. முன் பக்கத்தில் இருந்த இரும்புக் கம்பிக் கதவிலிருந்து உள்ளே சென்று நேர்த்தியான பாதையின் இரண்டு பக்கங்களிலும் மரப் பாத்திகள் இருந்ததன்றி அதன் இரு புறங்களிலும் பூத் தொட்டிகளும் பழ மரங்களும் நெடுந்துரம் வரையில் பரவியிருந்தன. இரும்புக் கம்பிக் கதவுகளிலிருந்த இடத்திற்கும், கட்டிடம் இருந்த இடத்திற்கும் நடுவில் அந்தப் பாதை சுமார் 200-கஜ தூரம் இருந்தது. அந்தப் பாதையின் வழியாக விரைந்து சென்ற புருஷர் ஐந்து நிமிஷ நேரத்தில் கட்டிடம் இருந்த இடத்தை அடைந்தார். அடைந்தவுடனே எதிரிலிருந்த தாழ்வாரத்தில் ஏறிக் கட்டிடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகாமல், அவர் அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு தரையிலேயே நடந்தபடி அந்தத் தோட்டத்தின் இடது பக்கமாகத் திரும்பினார். அதைக் கண்ட அந்த ஸ்திரீமுன்னிலும்