பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o i i பொன் அன்ன வி' 'பொன் நேர் தாது”

  • பொன்போல் பீரம்"

"பொன் மருள் புதுப் பூ" பொன் விக் கொன்றை’’ பொன் வீ வேங்கை’ என உவம உருபு கொடுத் தும் தொகுத்தும் பாடப்படும். இங்கு, 'பொன்படு” எனப் படு’ என்னும் துணைவினையால் கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. படுதல் = உண்டாதல். இமய மலையில் பொன் உண்டாகும்' என்பர். குடகு மலையையும் 'பொன்படு மலை என்பர். 'பொன்படு நெடுங்கோட்டு இமயம்" (புறம் 39 : 14,15.) 'பொன்படு நெடுவரை' (புறம் 166 : 27) 'பொன்படு மால் வரை' (புறம் : 201 : 18) -என்பவற்றால் அறியலாம். இங்கெல்லாம் 'பொன் உண்டாகும்' என்றே பொருள்கொண்டனர். இவை போன்றே பொன்படு வாகை' என்றதும் ஆகும். பொன் உண்டாகும் வாகை என்று பொருள்படும். அவ்வாறாயின் வாகையில் பொன் எவ்வாறு உண்டாகும்? நன்னனது நாட்டில் வாகை மரம் மிகுதி. நாட்டு வளத் தைக் காட்டும் வகையிலும் இஃது அமைந்தது. எனவே, அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அவனது நாடு கொண்கான நாடு. அந்நாடு, 'பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு'T -எனப்பட்டது. இதனையே 'கொங்கு-நாடு’ என்பர். (கொங்கு = பொன்) இதனால் பொன் உண்டாகும் அவனது நாட்டு வாகைமரம் 'பொன் படு வாகை" எனச் சிறப்பிக்க, பட்டது. நாட்டின் பொன் வளம், நாட்டின் காவல் மரத்திற்கு ஏற்றிப் பாடப்பட்டது. இங்கு வாகை மரத்தைக் குறிப்பதும் நோக்கத்தக்கது; பூவை அன்று. எனவே, இதுகொண்டு வாகைப் பூவின் நிறம் பொன் நிறமான மஞ்சள் நிறம் என்று கொள்ள இயலாது. இந்நிறத்தில் வாகைப் பூவும் இல்லை. 1 நற் : 891 : 6