பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 ஷண்முகவடிவு ஸ்நானம்செய்து ஏதோ சொற்பமாக ஆகாரம் செய்து கொண்டவளாய்த் தனது சயனத்தில் படுத்தாள். அவளது நினைவு முழுதும் அன்றையதினம் நேர்ந்த சம்பவங்களிலேயே சென்று லயித் திருந்தது; தன்னைக் காப்பாற்றித் தனக்கு உயிர்கொடுத்த புண்ணியவானிடத்தில் தான் மரியாதைக் குறைவாக நடந்து நன்மைக்குக் கைம்மாறாக அவரது மனம் புண்படும்படி தான் புன்மையாக நடந்துகொண்டதைப் பற்றிய பெரும், விசனமும் அவளது மனதைப் புண்படுத்திக் கொண்டிருந்தது, அதோடு, அந்த இரவில் தங்களுக்கு மறுபடி எவ்விதத் துன்பமும் நேராமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் அச்சமும் அவளது உடம்பை திடுக்கு திடுக்கென்று நடுக்கித்துக்கிப்போட்டது. அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து சஞ்சலமுற்றிருந்த நமது பெண்பாவையான ஷண்முகவடிவு, அன்றையதினம் பகலிலிருந்து அநுபவித்த தேகப் பிரயாசை யினாலும், மனோ வியாகுலத்தினாலும் நிரம்பவும் அலுத்துத் தளர்வடைந்திருந்தாள். ஆகையால், அவள் வெகு சீக்கிரத்தில் துயிலில் ஆழ்ந்துவிட்டாள். வேலைக்காரியான முத்தம்மாள் அந்த இரவு முழுதும் இமைகளை ஒரு நிமிஷ நேரமும் மூடாமல் கரைகடந்த சஞ்சலமும் கலவரமும் அடைந்தவளாய் ப் படுத்திருந்து அதிகாலையில் எழுந்து தனது வழக்கப்படி ரஸ்தாவுக்குப் போய் இரும்புக்கம்பிக் கதவைத் திறந்து வைக்க எத்தனித்தபோது அதற்குப் பக்கத்தில் ரஸ்தாவில் கையும் தடியுமாக நின்று கொண்டிருந்த நாலைந்து முரட்டாள்களைக் கண்டு கலங்கி நடுநடுங்கினவளாய்க் கதவைத் திறக்காமல் திரும்பி உள்ளே ஒடி வந்து வீட்டின் கதவுகளை எல்லாம் உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு பெருத்த திகில் கொண்டவளாய் ஷண்முக வடிவை எழுப்ப, அவள் திடுக்கிட்டு எழுந்து என்ன விசேஷம் என்று வினவ, வேலைக்காரி தான் கண்ட விஷயத்தை மெதுவாக வெளியிட்டாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு என்ன செய்வதென்பதை அறியாமல், தனது கைகளைப் பிசைந்து கொள்ளுகிறாள். அவளது அழகிய