பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - பூர்ணசந்திரோதயம்-2 வந்தவுடனே அவளிடத்திலேயே கொடுத்து விடுவோம். ஆனால், அவனும் கூடவே தொடர்ந்து உன்னுடைய ஜாகைக்கு வராமல் நீஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹேமாபாயி:- எஜமானருடைய பிரியப்படியே நான் சகல விஷயங்களையும் திறமையாக நிறைவேற்றி வைக்கிறேன். அதைப் பற்றி எஜமானருக்குக் கொஞ்சமும் கவலையே வேண்டாம். ஜெமீந்தார்:- உனக்கு நான் செய்யப்போகும் சன்மானம் இப்படிப்பட்டது என்பதை நான் இப்போதே வெளியிட வேண்டும் என்பதில்லை என்று நினைக்கிறேன். உன் விஷயத்தில் நான் எவ்வளவு தாராளமாக நடந்து கொள்வேன் என்பது உனக்குத் தெரியாததல்ல. ஹேமாபாயி:- (அதைக்கேட்டு சஞ்சலமடைந்தவள் போல நடித்து) எனக்குச் சன்மானம் கொடுப்பதைப்பற்றி எஜமானர் இப்போது சொல்லக்கூட வேண்டுமா? அந்த வார்த்தையையே எடுக்கத் தேவையில்லை. எஜமானர் விஷயத்தில் பிரயாசை எடுத்துக் கொண்டு உழைப்பதே ஒர் ஆனந்தமாகும். ஆகையால், நான் என்னால் இயன்ற வரையில் எப்படியாவது முயற்சி செய்து காரியத்தைப் பலிதமாக்குகிறேன். அதுதான் பிரதானம். மற்றது எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் போகலாம் அல்லவா? இன்னம் ஏதாவது என்னால் ஆகவேண்டுமா? ஜெமீந்தார்: வேறே ஒன்றுமில்லை. நீ சீக்கிரமாகப் போய்க் காரியத்தை முடி. இப்போதே செலவுக்கு ஏதாவது பணம் வேண்டுமா? - ஹேமாபாயி:- பணத்துக்கு என்ன அவசரம்? அதெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளுகிறேன். அவசரமாகப் பணம் வேண்டுமானால், நான் என்னிடம் இருப்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன்.