பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 தட்டித்தடுமாறி எழுந்தேன். எழுந்து இருபது கஜ தூரம் நடப்பதற்குள் நான் பல இடங்களில் மயங்கி விழுந்து விட்டேன். ஆனால், கொஞ்ச தூரத்தில் ஒரு நாவல் மரம் தென்பட்டது. அந்த மரம் முழுதும் பழங்கள் மயமாக நிறைந்து காணப்பட்டது, தரை முழுதும் ஒரு சாண் உயரம் பழங்கள் விழுந்து அடர்ந்து கிடந்தன. அதைக் காணவே எனக்கு உயிர் திரும்பியது. நடப்பதற்கு ஒருவித திடமும் உண்டாயிற்று. காற்றில் அந்த மரத்தின் கிளைகள் அசைந்தசைந்து ஆடியது, "இங்கே வா; கவலைப்படாதே; இனி நீ பிழைத்துப் போவாய்' என்று சொல்லி எனக்கு அபயஸ்தம் கொடுத்து என்னைக்கூப்பிடுவதுபோல இருந்தது. நான் மெதுவாக எழுந்து பல்லைக் கடித்துக் கொண்டு நடந்து அந்த நாவல்மரத்தண்டை போய்க் கீழே கிடந்த பழங்களில் சிலவற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். ஆகா அவைகள் தேவாமிருதம்போல இருந்தன. காய்ந்து கட்டை போல மாறிப்போயிருந்த என்னுடைய வாயிலும் தொண்டையிலும் அந்தப் பழங்களின் சாறு படவே, என்னுடைய தாகமும் ஒருவாறு தணிந்தது. நான் மேன்மேலும் அந்தப் பழங்களை எடுத்து எடுத்து மிகுந்த ஆவலோடு தின்றேன், அது ஆகாரமாகவும் தண்ணிராகவும் உபயோகப்பட்டது. ஆகையால், என் வயிறும் ஒருவாறு நிறைந்தது; தாகமும் கொஞ்சம் அடங்கியது. அதற்குமேலும் பழங்களைத் தின்ன என்னால் முடியவில்லை ஆகையால், அவ்வளவோடு நிறுத்தி, அவ்விடத்தில் நிழலில் கொஞ்சநேரம் இருந்தபின் புறப்பட்டு மேலும் நடக்கத் தொடங்கி வெகுதூரம் வந்தேன். மறுபடியும் பொழுது போய் விட்டது. சாயுங்காலவேளை வந்துவிட்டது. அந்தச் சமயத்தில் நான் இந்தத் தஞ்சாவூரின் மேலக்கோடிக்கு வந்து சேர்ந்தேன். இந்த ஊரில் யோக்கியமான மனிதரால் வைக்கப்பட்டுள்ள சோற்றுக்கடை எங்கேயாவது இருக்கிறதா என்று விசாரித்து, அந்த இடத்துக்குப் போய், போஜனம் செய்து அவ்விடத்திலே ராத்திரிப் பொழுதைக் கழித்து மறுநாள் எழுந்து, மேலே